Home
Music

புதிய வாக்மேனை மார்க்கெட்டில் களமிறக்குகிறது சோனி

By Karthikeyan
புதிய  வாக்மேனை மார்க்கெட்டில் களமிறக்குகிறது சோனி

தனது போர்ட்டபுள் எம்பி3 ப்ளேயர்கள் மற்றும் வாக்மேன்கள் மூலமும் சோனி நிறுவனம் சந்தையில் ஒரு நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது.

தற்போது சோனியின் ஆராய்ச்சி குழு அல்ட்ரா போர்ட்டபுள் மற்றும் மிகவும் அடக்கமான எம்பி3 ப்ளேயரை அறிமுகப்படுத்துகிறது. இதன் பெயர் சோனி வாக்மேன் டபிள்யூ சீரிஸ் ஆகும்.

சோனி வாக்மேன் டபுள்யு சீரிஸ் ஒரு எம்பி3 ப்ளேயர் மற்றும் ஒரு ஜோடி ஹெட்போனுடன் வருகிறது.

இதன் எடை வெறும் 35 கிராம் மட்டுமே. இதை இயக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் பட்டன்கள் எல்லாம் இந்த டிவைஸில் இன்டக்ரேட் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக இதிலுள்ள பட்டன்கள் எல்லாவற்றையும் நிறைய காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும். இந்த எம்பி3 ப்ளேயரை நாம் இருந்த இடத்தில் இருந்துதான் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நாம் போகும் போதும் வரும் போதும் அல்லது ஜாக்கிங் செய்யும் போதும் அல்லது நமது வேலைகளில் ஈடுபடும் போதும் இதை நமது காதுகளில் பொருத்திக் கொள்ளலாம்.

இதில் உள்ள இயர் பட்ஸ்களும் மிக மிருதுவாக உள்ளன. அவை நமது காதுகளுக்கு எரிச்சலைத் தராது. மேலும் இந்த இயர் பட்ஸ்கள் பல அளவுகளில் வருவதால் நமது காதுகளிள் அளவுக்கேற்ப இவற்றை தேர்ந்தெடுக்க முடியும்.

இதில் பாடல்களை இயக்குவதற்கும் நிறுத்துவதற்கும் மற்றும் ட்ராக்குகளை மாற்றுவதற்கும் உரிய பட்டன்கள் வலது காதிலுள்ள டிவைஸில் உள்ளது. மேலும் இதில் ஆன் ஆப் பட்டனும் உண்டு.

ஒலி அளவை கூட்டுவதற்கும் மற்றும் குறைப்பதற்குமான பட்டன்கள் இடது காதிலுள்ள டிவைஸில் உள்ளது. மேலும் இந்த டிவைஸ் நமது காதுகளில் கச்சிதமாக பொருந்தி இருக்கும்.

நாம் வேலை செய்யும் போதோ அல்லது ஜாக்கிங் செய்யும் போதோ இது கீழே விழந்துவிடாது.

இந்த டிவைஸ் என்டபுள்யுஸட்-டபுள்யு262 மற்றும் என்டபுள்யுஸட்-டபுள்யு252 என்ற 2 பிரிவுகளில் வருகிறது. இது ஒரு எளிமையான இசைப் பேழயாகும். இதை இயக்குவது மிக எளிதாக இருக்கும்.

ஆனால் இதில் ட்ஸ்ப்ளே இல்லாததால் இது ஒரு குறையாக தெரியும். இந்த டிவைஸ் பக்காவான தரமான இசையை வழங்குகிறது. இதிலுள்ள பேஸ் இசை மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இதிலிருந்து வரும் இசையைக் கேட்கும் போது நாம் வேற்று உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும்.

மேலும் யுஎஸ்பி கேபிள் மூலம் இந்த டிவைஸை கனிணி மற்றும் லேப்டாப்பில் மிக எளிதாக இணைத்துவிடலாம்.

இந்த டிவைஸில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் நீர் தடுப்பு வசதி உள்ளது. இதை 12 மணி நேரம் உபயோகப்படுத்தினாலும் இதன் பேட்டரி தாங்கும் சக்தியைக் கொண்டது.

இந்த ப்ளேயர் சப்ளிங் கேபபிளிட்டி, சாப்பின் கேபபிளிட்டி மற்றும் ரிபீட் கேபபிளிட்டியைக் கொண்டுள்ளது. சப்ளிங் கேபபிலிட்டி மூலம் நாம் ட்ராக் வரிசையை மாற்ற முடியும்.

ரிபீட் கேபபிளிட்டி ஒரு ட்ராக்கை மீண்டும் மீண்டும் ப்ளே செய்யும். டிஸ்ப்ளே இல்லாத குறையை இந்த சாப்பின் சாப்ட்வேர் நிவர்த்தி செய்துவிடும்.

இந்த 2ஜிபி மாடல் சோனி வாக்மேன் டபுள்யு சீரிசின் விலை ரூ.5,000 ஆகும். இது பல நிறங்களில் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X