Home
Music

சோனி வழங்கும் குட்டி வாக்மேன்கள்!

By Karthikeyan
சோனி வழங்கும் குட்டி வாக்மேன்கள்!

இசை உலகத்தில் சோனியின் வாக்மேன்களுக்கு எப்போதுமே உயர்ந்த இடம் உண்டு. இப்போது சோனி வாக்மேன் டிவைஸ் டேட்டாபேசை அப்டேட் செய்ய இருக்கிறது. இதுவரை ஏராளமான வாக்மேன்கள் வந்துள்ளன. அந்த வகையில் சோனி இப்போது தனது புதிய போர்ட்டபுள் யுஎஸ்பி மியூசிக் கெட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்த இருக்கின்றன. இந்த கெட்ஜெட்டுகள் சோனியின் பி வரிசை வாக்மேன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இந்த புதிய வாக்மேன்களின் பெயர் பி170 ஆகும்.

பி170 வாக்மேன் பலவிதமாக வண்ணங்களில் வருகிறது. அடிப்படையில் இது ஒரு பென் ட்ரைவ் ஆகும். இசை பைல்களை காப்பி செய்து இதில் பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் இந்த வாக்மேனை கணினியோடு மிக எளிதாக இணைக்க முடியும். தகவல் பரிமாற்றத்திற்காக இந்த வாக்மேனுக்கு எந்தவித துணை சாப்ட்வேரோ அல்லது டேட்டா கேபிளோ தேவைப்படாது. இந்த வாக்மேனை யுஎஸ்பி போர்ட் மூலம் இணைத்துவிட்டால் போதும்.

இந்த பி170 வாக்மேனின் முக்கிய அம்சமே அதன் அடக்கமான தோற்றம் ஆகும். அதாவது இந்த வாக்மேன் மிகவும் சிறியதாக இருக்கிறது. இதன் எடை 23 கிராம்கள் மட்டுமே. மேலும் இந்த வைக்மேனே சட்டையிலோ அல்லது பெல்ட்டிலோ மிக எளிதாக பொருத்திக் கொள்ளலாம். அடுத்ததாக இந்த வாக்மேன் 18 மணி நேரம் தொடர்ந்து இசையைத் தரவல்லது.

இந்த பி170 வாக்மேனின் இன்னுமொரு விஷயம் என்னவென்றால் இதை 3 நிமிடம் சார்ஜ் செய்தாலே போதும் இது 90 நிமிடம் இசையைக் கொடுக்கும். இதே வசதியைக் கொண்ட டிவைஸ்களை மற்ற நிறுவனங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தாலும் சோனியின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சோனி வாக்மேன் எந்த அளவிற்கு தரத்தில் உயர்ந்து உள்ளது என்பது தெரியும்.

இந்த பி170 வாக்மேன் 2ஜிபி மற்றும் 4ஜிபி என 2 மாடல்களில் வருகின்றன. இந்த வாக்மேன்களை சாதாரண கணினி முதல் வைபை டிவஸ்கள் மற்றும் கார் ஸ்டிரியோ டிவைஸ்கள் வரை எல்லா டிவைஸ்களிலும் மிக எளிதாக இணைக்க முடியும்.

இந்த டிவைஸ் மிக சிறியதாக உள்ளதால் இதை எடுத்துச் செல்வது மிக எளிது. அதேபோல் இதன் செயல் திறனும் மிக பக்காவாக இருக்கும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X