Home
Music

2 நாட்களில் 3 லட்சம் விற்றுத் தீர்ந்த புதிய சோனி ப்ளேஸ்டேசன்!

By Karthikeyan
2 நாட்களில் 3 லட்சம் விற்றுத் தீர்ந்த புதிய சோனி ப்ளேஸ்டேசன்!

சோனி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஒரு புதிய ப்ளே ஸ்டேசனை ஜப்பானில் அறிமுகப்படுத்தியது. இந்த டிவைசின் பெயர் ப்ளேஸ்டேசன் வீட்டா ஆகும். விற்பனையில் இந்த ப்ளேஸ்டேசன் சாதனை படைத்து வருகிறது. அதாவது இதை அறிமுகப்படுத்திய 2 நாட்களுக்குள் 3 லட்சம் ப்ளே ஸ்டேசன்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

சோனியின் இந்த ப்ளேஸ்டேசன் ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த டிவைசில் 2 கேமராக்கள் உள்ளன. அதுபோல் இதி்ல கேட்டகிரி உள்ளது. மேலும் இதில் 6 அக்சிஸ் மோசன் சென்சார்கள் உள்ளன. இதன் 5 இன்ச் ஒஎல்இடி திரை தொடு வசதி கொண்டது. அதுபோல் 3ஜி/வைபை, ஜிபிஎஸ், ரியர் தொடுதிரை, க்ராஸ் ப்ளே, 2 அனலாக் ஸ்டிக்குகள், எஆர்எம் கோர்டெக்ஸ் - எ9 கோர் கொண்ட சிபியு மற்றும் எஸ்ஜிஎக்ஸ்543 எம்பி4+ கொண்ட ஜிபியு ஆகிய அத்தனை வசதிகளையும் இந்த ப்ளேஸ்டேசன் கொண்டிருக்கிறது.

இந்த ப்ளேஸ்டேசன் வீடியோகேம் அனுபவத்தை முழுமையாக மாற்றிவிடும் என்பது உறுதி. அதாவது மிகவும் கடினமான விளையாட்டுகளையும் இந்த டிவைஸ் மிக எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த டிவைஸ் ஒரு அடக்கமான ஒன்றாகும். அதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அதே நேர்த்தில் இதை மிக எளிதாக இயக்கவும் முடியும்.

இந்த டிவைஸ் வைபை வசதி கொண்டுள்ளதால் இதில் விளையாடிக் கொண்டே நண்பர்களோடு அரட்டை அடிக்க முடியும். இதன் 2 கேமராக்கள் மூலம் தரமான படங்களை எடுக்க முடியும்.

இதன் 6 ஆக்சன் மோசன் சென்சார் மற்றும் இதன் 5 இன்ச் கொண்ட ஒஎல்இடி தொடுதிரை ஆகிய அத்தனை அம்சங்களும் வீடியோ கேம் விளையாடுவதற்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும். அதுபோல் விளையாடும் போது பட்டன்களை இதன் மூலம் மிக எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இந்த டிவைசின் விலை ரூ15000 மாக இருக்கும். மேலும் அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X