சோனி ப்ளேஸ்டேசன்-4 அறிமுகத்தை தள்ளிப்போட்ட சோனி?

Posted By: Karthikeyan
சோனி ப்ளேஸ்டேசன்-4 அறிமுகத்தை தள்ளிப்போட்ட சோனி?

சோனி ப்ளேஸ்டேசன்கள் உலக அளவில் உள்ள வீடியோ கேம் பிரியர்களின் சொர்க்கமாக இருக்கின்றன. அதாவது சோனி ப்ளேஸ்டேசன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து அது ஏராளமான நவீன ப்ளேஸ்டேசன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது சோனி தனது சோனி ப்ளேஸ்டேசன் 4 என்ற புதிய டிவைசை களமிறக்க இருக்கிறது.

அதவாது சோனி தனது ப்ளேஸ்டேசன் 4ஐ மிக விரைவில் களமிறக்க இருக்கிறது என்ற வதந்தி வந்தது. அதுவும் இந்த டிவைஸ் வரும் ஜூன் மாதம் நடக்கும் வியாபாரக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒரு சில இணையதளங்கள் வரிந்து கட்டிக் கூறின. ஆனால் சோனியின் இணை இயக்குனர் இந்த எல்லாவிதமான வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். அதாவது இந்த ப்ளேஸ்டேசன் 4 இப்போதைக்கு வராது. மாறாக அது வருவதற்கும் நீண்ட நாள்களாகும் என்பதாகும்.

சோனியின் வர்த்தக உத்தியைப் பார்த்தால் அது ப்ளேஸ்டேசன் வந்த பிறகும் கூட தனது ப்ளேஸ்டேசன் 2ஐ நீண்ட காலமாக விற்று வந்தது. அதாவது சோனியின் கருத்துப்படி ப்ளேஸ்டேசன் 3 டிவைஸ் 10 ஆண்டு கால ஆயுளைக் கொண்டதாகும். அதனால் இதை மனதில் வைத்தே இந்த டிவைஸ் 5 ஆண்டுகளுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனால் அதற்கு இன்னும் 5 ஆண்டு ஆயுள் மீதமிருக்கிறது. அதனால் இந்த மீதமுள்ள 5 ஆண்டுகளில் புதிய டிவைஸ் வரும் ஆனால் உறுதியாக் கூற முடியாது.

ஆனால் சோனியின் அடுத்த புதிய கேம் டிவைஸ் ஏராளமான புதிய அம்சங்களுடன் வரும் என நம்பலாம். ஆனால் சோனியின் அலுவலகர்களின் கூற்றுப்படி புதிய டிவைசில் ஆன்லைவைப் போல ஸ்ட்ரீமிங் டெலிவரி சிஸ்டம் இருக்காது. சோனி தனது ஆன்லைன் நெட்வொர்க் மூலம் ஏராளமான விளையாட்டுகள் மற்றும் மீடியா கன்டன்டுகளை வழங்கி இருக்கிறது. அதனால் அது தனது கட்டிங் எட்ஜ் கொண்ட கேம்களுக்கு டிவிடி மற்றும் ப்ளூரே போன்ற பிசிக்கல் மீடியாக்களை நம்புகிறது.

மேலும் சோனி சில துணை அக்சஸரிகளை ப்ளேஸ்டேசன் 3க்கு வழங்குவதன் மூலம் அதன் ஆயுளை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதனால் சோனியின் அடுத்த ப்ளேஸ்டேசன் 4 வருவதற்கு இன்னும் நாள்கள் பலவாகும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot