Home
Music

மூச்சு முட்ட பாட்டு கேட்க.. புதிய சோனி ஹெட்செட்!

By Karthikeyan
மூச்சு முட்ட பாட்டு கேட்க.. புதிய சோனி ஹெட்செட்!

புதிய வயர்லெஸ் ஹெட்செட்டை அறிமுகப்படுத்திய சோனி

சமீபத்தில் சோனி நிறுவனம் மிகத் தரமான ஒரு ஸ்டீரியோ ப்ளூடூத் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஹெட்செட்டின் முக்கிய அம்சம் இதன் இனிமையான இசையாகும். இந்த ஹெட்செட்டின் பெயர் ஸ்மார்ட் வயர்லஸ் ஹெட்செட் ப்ரோ ஆகும். இந்த ஹெட்செட் பல வேலைகளைச் செய்யக்கூடியது.

இந்த ஸ்மார்ட் ஹெட்செட் ஒரு அடக்கமான டிவைஸ் ஆகும். இது ஒரு எம்பி3 ப்ளேயரைப் போல செயல்படுகிறது. அதே போல் இதில் எப்எம் ரேடியோவும் உண்டும். அதோடு ஆன்ட்ராய்டு டிவைஸ்களுக்கு இந்த ஹெட்செட் இரண்டாவது டிஸ்ப்ளேயாக செயல்படுகிறது.

இந்த ஸ்மார்ட் ஹெட்போனில் உள்ள இணைப்பு வசதிகளைப் பார்த்தால் இது ப்ளூடூத் 3.0 இணைப்பு மற்றும் மல்டிபாய்ண்ட் இணைப்பு போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. அதுபோல் இது 3.5 மிமீ ஆடியோ போர்ட்டும் கொண்டிருக்கிறது.

இதன் பேட்டரி 800 மணி நேரம் ஸ்டான்ட்-பை டைமை இந்த ஹெட்போனுக்கு வழங்குகிறது. இந்த ஹெட்போனில் உள்ள ஸ்பீக்கரின் ப்ரீக்வன்சி ரேஞ்ச் 10 முதல் 20000 ஹெர்ட்ஸ் ஆகும். இந்த ஹெட்போன் மைக்ரோ எஸ்டி கார்டும் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பு 6 மிமீ x 2.5 மிமீ x 0.8 மிமீ ஆகும். இதன் எடை 18 கிராம் மட்டுமே.

இந்த ஸ்மார்ட் ஹெட்போன் அடக்கமாக உள்ளதால் இதை காதில் கச்சிதமாகப் பொருத்த முடியும். மேலும் இதன் ஸ்டைலும் அட்டகாசமாக உள்ளது. மேலும் இது ஒரு சோனியின் படைப்பாக இருப்பதால் இதன் ஆயுளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

மேலும் இந்த ஹெட்போனில் ப்ளூடூத் இணைப்பு உள்ளதால் கார் ஓட்டும் போதும் அல்லது உடற்பயிற்சி உடற்பயிற்சி செய்யும் போதும் இந்த ஹெட்போன் தானாகவே இயங்கிக் கொண்டிருக்கும். நாம் அடிக்கடி நமது கைகளால் இயக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த ப்ளூடூத் 3.0 இணைப்பு 10 மீட்டர் வரை தகவல் பரிமாற்றத்தைச் செய்யக்கூடியது. மேலும் இதில் உள்ள ஒஎல்இடி டிஸ்ப்ளே நமது ஆன்ட்ராய்டு டிவைசின் இரண்டாவது டிஸ்ப்ளேயாகச் செயல்படும். அதாவது அழைப்புகள் வரும் போது அழைப்பவர்களின் பெயர்கள் டிஸ்ப்ளேயில் தெரியும். மேலும் இமெயில்கள், டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் மீடியா தலைப்புகள் போன்ற அத்தனை விவரங்களையும் இந்த டிஸ்ப்ளேயில் நாம் பார்க்க முடியும்.

இந்த ஸ்மார்ட் ஹெட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டு வருகிறது. மேலும் மெமரி கார்டில் உள்ள எம்பி3 மற்றும் வேவ் ட்ராக்ஸ் போன்றவற்றையும் இந்த ஹெட்போன் ப்ளே செய்யும் திறன் கொண்டது. மேலும் இதில் எப்எம் ரேடியோவும் உள்ளதால் ரேடியோவும் கேட்க முடியும். இந்த சோனி ஹெட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் சந்தைக்கு வரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X