பரிசுப்போட்டியுடன் புதிய கேமராவை பிரபலப்படுத்தும் சோனி

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான கேமரா, டிவி, வீடியோகேம் போன்ற அத்தனை துறைகளிலும் வெற்றி பெற்ற நிறுவனம் எதுவென்றால் அது சோனி நிறுவனமாகத்தான் இருக்க முடியும். கெனான், கோடக் போன்ற முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் சோனியின் கேமராக்களுக்கு இன்னும் அதிக வரவேற்பு உள்ளது. அதனால் டிஜிட்டல் கேமரா உலகத்திற்குள் நுழைந்து அதை புரட்டிப்போட முடிவெடுத்திருக்கிறது சோனி.
சோனி 7 பட எஃபெக்ட் சவால் பிராச்சாரத்தை மேற்கொண்டது. அந்த பிரச்சாரத்தோடு சோனி டிஎகஸ்55 என்ற புதிய கேமராவையும் அறிமுகப்படுத்தியது. இந்த டிஎக்ஸ்55 கேமரா சோனியின் சைபர்ஷாட் வரிசையில் வந்த ஒரு உயர் தர டிஜிட்டல் கேமரா ஆகும். இந்த கேமரா சோஷியல் மீடியா, வீடியோ மற்றும் ஆன்லைன் சார்ந்தவை மற்றும் மிக உயர்ந்த போட்டோ அனுபவம் ஆகிய வசதிகளை உள்ளடக்கி இருக்கிறது.
அடிப்படையில் சோனியின் வியாபார யுக்தி என்னவென்றால் சவால் பிரச்சாரத்தோடு தமது புதிய சைபர்ஷாட் டிஎக்ஸ்55 மற்றும் பிக்சர் எபக்டையும் அறிமுகப்படுத்தி அதன் மூலம் டிஎக்ஸ்55 டிஜிட்டல் கேமராவை வாடிக்கையாளர்களை பயன்படுத்தை வைக்க வேண்டும் என்பதாகும்.
சோனி சைபர்ஷாட் டிஎக்ஸ்55 கேரா உலகிலேயே மிக மெல்லிய கேமரா என்று கருதப்படுகிறது. இதன் தடிமன் 12.2மிமீ மட்டுமே. 7 பட எபக்ட் சவால் பிரச்சாரம் என்பது ஒரு பேஸ்புக் அப்ளிகேசன் ஆகும். இது கேமராவின் இயல்பு மற்றும் அதன் செயல்பாட்டை மிக அழகாக விளக்குகிறது. இந்த பிரச்சாரம் வாடிக்கையாளர்களின் திறமைகளை ஊக்குவிக்கிறது.
அதுபோல் இந்த சவாலில் போட்டி இடுபவர்களுக்கு சிறந்த பரிசுகளும் காத்திருக்கின்றன. அதனால் ஜனவரி 18 வரையிலும் இந்த சவாலில் கலந்து கொள்ளலாம். அதாவது இந்த 7 பட எபக்ட் சவால் மூலம் மிகத் தரமான, புதுமையான தெளிவான படங்களை எடுத்து அதை பேஸ்புக்கில் உள்ள 7 நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த 7 பேரை சாவாலில் குதிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்த சவாலில் வெற்றி பெற்றால் சோனி டிஎக்ஸ்55 மற்றும் ஒரு பாய் பேக் காத்திருக்கிறது. இப்போது இந்த பிரச்சாரம் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் வெப் பேஸ்டு வர்த்தகம் மூலம் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications