Home
Music

சோனியின் புதிய 3டி வீடியோ கேம் வியூவர்!

By Karthikeyan
சோனியின் புதிய 3டி வீடியோ கேம் வியூவர்!

எச்எம்ஸட் - டி1 என்பது சோனி நிறுவனத்தால் பல ஆண்டு காலமாக உச்சரிக்கப்பட்டு வரும் ஒரு புதிய தனித்துவம் வாய்ந்த கான்செப்ட் ஆகும். இந்த கான்செப்ட்டை சோனி 1997ல் வெளியிட்டது. பின் 15 வருடங்களுக்கு பிறகு இப்போது இந்த தொழில் நுட்பத்தை சோனி கையில் எடுத்து இருக்கிறது.

முதலில் இதை க்ளாஸ்ட்ரன் என்று அழைக்கப்பட்டது. பின் இது எல்சிடி திரைகளைக் கொண்டிருந்தது. ஆனால் இது 3டி அல்லது எச்டி திரை அல்ல. சோனியின் புதிய கெட்ஜெட்டில் இந்த தொழில் நுட்பத்தை அனுபவிக்க முடியும்.

சோனியின் புதிய டிவைசில் 3டி வீடியோவைப் பார்க்க முடியும். மேலும் இந்த டிவைஸ் சாதாரண 2டியிலும் இயங்கும் வசதி கொண்டது. ஏற்கனவே சோனி தனது ப்ளை ஸ்டேசன் 3ல் இந்த 3டி வசதி கொண்ட ப்ளூரே ப்ளேயரை வைத்திருக்கிறது. அதனால் கேமிங் டிவைஸ்களில் 3டி கேமிங் அனுபவத்தைப் பெற முடியும்.

இந்த எச்எம்ஸட்-டி1 என்பது ஒரு சிறிய பெட்டி அளவில் இருக்கிறது. இதில் எச்டிஎம்ஐ போர்ட்டுகள் மற்றும் வீடியோ கேபிள்கள் இதன் பக்கவாட்டில் உள்ளன. மேலும் இதை டிவியுடன் இணைக்கும் எச்டிஎம்ஐ கேபிளும் உள்ளது. அதன் மூலம் இதை பயன்படுத்துவோர் 3டி வியூவர் கெட்ஜெட்டை இதில் இணைக்க முடியும்.

இப்போது இதில் 3டி வியூவர் எடை குறைவாக இருப்பதால் அதை தலையில் அணிந்து கொள்ளலாம். இந்த கெட்ஜெட் மிகத் தரமான 720பி பிக்சலுடன் கூடிய எச்டி வசதியை வழங்குகிறது. இந்த டிவைசின் விலை ரூ.40,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X