சோனி வழங்கும் முத்தான மூன்று புதிய கேமராக்கள்!

Posted By: Karthikeyan
சோனி வழங்கும் முத்தான மூன்று புதிய கேமராக்கள்!

கெனான் மற்றும் பிற நிறுவனங்கள் மக்களைக் கவரும் வகையில் இப்போது தரமான கேமராக்களை வழங்கி வருகின்றன. இதேபோன்று, சோனி நிறுவனமும் சைபர் ஷாட் வரிசை கேமராக்களில் கொடிகட்டி பறந்து வரும் வருகிறது. அந்த வரிசையில் 3 புதிய கேமராக்களை களமிறக்க இருக்கிறது சோனி.

இந்த 3 கேமராக்களுமே சிஎம்ஒஎஸ் அடிப்படையில் அமைந்த காம்பெக்ட்டான கேமராக்களாகும். இதன் பெயர்கள் முறையே டிஎஸ்சி-டிஎக்ஸ்200வி, டிஎஸ்சி - டபுள்யுஎக்ஸ்50 மற்றும் டிஎஸ்சி-டிபுள்யுஎக்ஸ்70 ஆகும்.

டிஎஸ்சி-டிஎக்ஸ்200வி கேமராவின் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் இந்த கேமரா ஜிபிஎஸ் வசதியைக் கொண்டுள்ளது. அதுபோல் 18.2 மெகா பிக்சல் பேக்லிட் சிஎம்ஒஎஸ் சென்சாரையும் கொண்டுள்ளது. இதன் லென்ஸ் 26 மிமீ ஆகும். அதுபோல் இந்த கேமரா 10எக்ஸ் வெர்ச்சுவல் சூமையும் மற்றும் 5எக்ஸ் ஆப்டிக்கல் சூமையும் கொண்டுள்ளது. மேலும் இது உயர் தரமான சென்சிட்டிவி்ட்டி தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் வெளிச்சம் இல்லாத இடத்திலும் இந்த கேமரா அழகான படங்களை எடுக்கும்.

இந்த கேமராவின் சூப்பர் பாஸ் ஆட்டோ போக்கஸ் வேகம் பகல் ஒளியில் 0.13 விநாடியாகவும் அதே நேரத்தில் குறைந்த ஒளியில் 0.25 வினாடியாகவும் இருக்கும். இந்த கேமரா 3.3 இன்ச் ட்ரூ - ப்ளாக் ஒஎல்இடி அகல தொடுதிரையாக் கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த கேமரா குளிர், தண்ணீர் மற்றும் தூசு ஆகிய அத்தனையிலிருந்து தடுப்பு வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த கேமரா மெல்லியதாக அதே நேரத்தில் ரிஇன்போர்ஸ்டு க்ளாஸ் டிசைனைக் கொண்டிருக்கிறது. இந்த கேமரா 1080பி முழு எச்டி வீடியோவை சப்போர்ட் செய்யும். மேலும் இந்த கேமரா பிக்சர் எபக்ட் வசதி மற்றும் போட்டோ க்ரியேட்டிவிட்டி இன்டர்பேஸ் வசதி ஆகிய அத்தனை வசதிகளையும் வழங்குகிறது. மேலும் இந்த கேமராவில் வீடியோ சூட்டிங் செய்யும் போது இதன் படங்கள் 13 எம்பிக்கு சமமான அளவில் மிகத் தரமாக இருக்கும்.

டிஎஸ்சி - டபுள்யுஎக்ஸ்50 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும் போது இந்த கேமரா 16.2 மெகா பிக்சல் ஆர் சிஎம்ஒஎஸ் சென்சாரைக் கொண்டுள்ளது. இந்த கேமராவும் 25 மிமீ லென்சைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 10எக்ஸ் வெர்ச்சுவல் சூமையும் மற்றும் 5எக்ஸ் ஆப்டிக்கல் சூமையும் கொண்டுள்ளது. மேலும் இது 3 இன்ச் 921கே டாட் எல்சிடி தொடுதிரையைக் கொண்டிருக்கிறது.

இதுவும் உயர் தரமான சென்சிட்டிவி்ட்டி தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் வெளிச்சம் இல்லாத இடத்திலும் இந்த கேமரா அழகான படங்களை எடுக்கும். மேலும் இந்த கேமராவில் வீடியோ சூட்டிங் செய்யும் போது இதன் படங்கள் 12எம்பிக்கு சமமான அளவில் மிகத் தரமாக இருக்கும். அதுபோல் இந்த கேமராவில் பிக்சர் எபக்ட் வசதியும் உள்ளது.

இறுதியாக டிஎஸ்சி-டிபுள்யுஎக்ஸ்70 கேமராவைப் பார்த்தால் இது 16.2 மெகா பிக்சல் சிஎம்ஒஎஸ் சென்சார், 25 மிமீ லென்ஸ் மற்றும் 2.1 இன்ச் எல்சிடி திரை போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் வீடியோ சூட்டிங் செய்யும் போது இதன் படங்கள் 12எம்பிக்கு சமமான அளவில் மிகத் தரமாக இருக்கும்.

இந்த 3 கேமராக்களும் மிக அழகாக உள்ளன. டபுள்யுஎக்ஸ்70 கேமரா சில்வர், வெள்ளை, கருப்பு, பிங்க் மற்றும் வயலட் போன்ற நிறங்களில் வருகிறது. டிஎக்ஸ்200வி சில்வர், கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் வருகிறது. டிபுள்யுஎக்ஸ்50 சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் வருகிறது. இந்த கேமரவில் விலை மற்ற இரண்டைவிட குறைவாக இருக்கும்.

விலையைப் பொருத்தமட்டில் டிஎக்ஸ்200வி ரூ.25,000, டிஎஸ்சி டபுள்யுஎக்ஸ்70 ரூ.11,500 மற்றும் டபுள்யுஎக்ஸ்50 ரூ.10,000 போன்ற விலையில் வருகின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்