ரிமோட் வசதி இல்லாமல் சோனோஸ் மியூசிக் ப்ளேயர்!

Posted By: Karthikeyan
ரிமோட் வசதி இல்லாமல் சோனோஸ் மியூசிக் ப்ளேயர்!

ஹைபை மியூசிக் சிஸ்டங்களைத் தயாரித்து வழங்குவதில் சோனோஸ் நிறுவனம் முன்னோடியாக இருக்கிறது. உலக அளவில் பெயர் பெற்ற சோனோஸ் இனி தனது படைப்புகளுக்கு ரிமோட் கண்ட்ரோல் வசதியை வழங்காது என்ற அறிவப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது இவ்வளவு காலமாக தயாரித்து வந்த சிஆர்200 என்ற ஹார்ட்வேர் கண்ட்ரோலரின் தயாரிப்பை நிறுத்திவிட்டது சோனோஸ்.

இந்த சிஆர்200 ஹார்ட்வேர் கண்ட்ரோலர் பல நல்ல தொழில் நுட்பங்களைக் கொண்டிருந்தது. அதாவது 1850 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட ஐயன் பாலிமர் பேட்டரி, 3.5 இன்ச் கப்பாசிட்டிவ் தொடு திரை மற்றும் கீபோர்டு ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தது.

இந்த ரிமோட் கண்ட்ரோலரை ஜூன் முதல் தேதியிலிருந்து சோனாஸ் விற்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக ஒரு புதிய சோனாஸ் சாப்ட்வேர் கண்ட்ரோலரை அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த கண்ட்ரோலரை கணினி, மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்றவற்றில் பயன்படுத்த முடியும்.

இந்த புதிய சோனோஸ் சாப்ட்வேர் கண்ட்ரோலர் 3.7 பல நல்ல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கண்ட்ரோலரின் இடது பகுதி சோனாஸ் டிவைஸ்களின் அட்டவணையைக் காட்டும். நடுப்பகுதி கவர் ஆர்ட்டைக் காட்டும். வலது பகுதி லைப்ரரி மற்றும் தேடல் வசதிகளைக் காட்டும்.

மேலும் இந்த கண்ட்ரோலரில் ட்ராக் மற்றும் ட்ராப் வசதி, ஒரே நேரத்தில் பல ட்ராக்குகளை நகர்த்தும் வசதி மற்றும் நிரந்தர தேடல் பெட்டி போன்ற வசதிகள் உள்ளன.

இந்த நேரத்தில் ரிமோட் கண்ட்ரோலை நிறுத்தி வைப்பது சோனோஸின் ஒரு முக்கிய முடிவு ஆகும். இனி இந்த ரிமோட் கண்ட்ரோலை எடுத்துச் செல்ல தேவை இருக்காது. அதற்கு பதிலாக வயர்லஸ் தொழில் நுட்பத்தின் மூலம் சோனோஸின் ஹைபை மியூசிக் சிஸ்டங்களை இயக்க முடியும். அதுபோல் பாடல் அட்டவணையை உருவாக்க முடியும். மேலும் வயர்லஸ் மூலம் ஒலி அமைப்பையும் நெறிப்படுத்த முடியும் என்று சோனோஸ் கருதுகிறது.

சோனோஸின் இந்த புதிய தாயாரிப்பு 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot