Home
Music

கிறிஸ்துமஸ் பரிசாக ஆக்டிவி மியூசிக் பிளேயருக்கு புதிய அப்டேட் !

By Super
கிறிஸ்துமஸ் பரிசாக ஆக்டிவி மியூசிக் பிளேயருக்கு புதிய அப்டேட் !

தற்போது மக்கள் தங்கள் உடலை பராமரிப்பதில் அதிகம் அக்கறை காட்டுகின்றனர். அதற்காக அவர்கள் அதிக நேரத்தையும் செலவழிக்கத் தயங்குவதில்லை. இதை மனதில் கொண்ட மோட்டோரோலா நிறுவனம் மக்களின் உடற்பயிற்சிக்கும் அதே நேரத்தில் பொழுது போக்கிற்கும் உதவும் வகையில் மோட்டோஆக்டிவி என்ற டிவைசை அறிமுகப்படுத்தியது.

இந்த டிவைஸ் ஒரு சிறப்பான மீடியா ப்ளேயர் ஆகும். குறிப்பாக தடகள வீரர்கள் தங்கள் பயிற்சியின் போது இந்த டிவைசை பொருத்திக் கொண்டு பயிற்சி மேற்கொள்ளும் போது இது அவர்களுக்கு களைப்பைப் போக்கும் கருவியாக இருக்கும். மேலும் இந்த ப்ளேயர் உயர்தர ஆடியோவையும் வழங்கும்.

ஏற்கனவே பலர் இந்த ப்ளேயரைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் மோட்டோரோலா நிறுவனம் இந்த டிவைசில் உள்ள சாப்ட்வேரை அப்டேட் செய்ய இருக்கிறது என்பதாகும். அதாவது இந்த டிவைசின் 8ஜிபி மற்றும் 16ஜிபி மாடல்கள் அப்டேட் செய்யப்பட இருக்கின்றன. இதன் 8ஜிபி மாடல் 4.55.76 அப்டேட்டையும் 16ஜிபி மாடல் 4.56.76 அப்டேட்டையும் பெற இருக்கின்றனர்.

இந்த அப்டேட்டினால் இதன் பேட்டரியின் செயல் திறனும் மேம்படுத்தப்பட்டு இருக்கும். இந்த அப்டேட் இதன் பேட்டரிக்கு கூடுதலான் ஆயுள் நீட்டிப்பை வழங்கும். அதாவது இதன் பேட்டரி தற்போது 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த பேட்டரி சாதாரணமான, விரிவு படுத்தப்பட்ட மற்றும் மாரத்தான என 3 வகைகளில் வருகிறது.

அடுத்ததாக இந்த டிவைசில் ஸ்டாப் வாட்சும் இணைக்கப்பட இருக்கிறது. இந்த மோட்டோஆக்டிவி டிவைசின் அப்டேட் விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் இந்த டிவைசை கணினியோடு இணைக்க வேண்டும். பின் டிவைஸ் மெனுவை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக செக் பார் டிவைஸ் அப்க்ரேட் என்ற மெனுவை க்ளிக் செய்ய வேண்டும். பின் தானாகவே டிவைஸ் அப்டேட் ஆகிவிடும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X