4 புதிய ஹெட்போன்களை அறிமுகப்படுத்தும் ஸ்கல்கேண்டி

Posted By: Karthikeyan
4 புதிய ஹெட்போன்களை அறிமுகப்படுத்தும் ஸ்கல்கேண்டி

ஹெட்போன் மற்றும் இயர்போன் வர்த்தகம் இந்தியாவில் நாளுக்கு நாள் மிக விரைவாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஏராளமான நிறுவனங்கள் தரமான மற்றும் மலிவு விலை ஹெட்போன் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபடுகின்றன. அந்த வரிசையில் ஸ்கல்கேண்டி நிறுவனம் தனது புதிய ஹெட்போன்களையும் இயர்போன்களையும் அறிமுகப்படுத்துகிறது. அந்த நிறுவனம் புதிதாக 4 ஆடியோ கருவிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதன் பெயர்கள் முறையே ஸ்கல்கேண்டி அப்ராக், ஏவியேட்டர், ஹெவி மெடல் மற்றும் பிக்ஸ் ஹெட்போன்கள் ஆகும். இந்த 4 ஹெட்போன்களும் மிக ஸ்டைலாக கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் வருகின்றன. மேலும் இதில் வரும் இசை மிகத் தெளிவாக இருக்கும். மேலும் இவை பார்ப்பதற்கு மிக தோரனையாக இருக்கும்.

இந்த ஏவியேட்டர் ஹெட்போன் ராக் நேசன் என்ற இசை நிறுவனத்தை நடத்திவரும் இசை மேதை ஜெய் ஸட் அவர்களால் பாராட்டு பெற்றிருக்கிறது.

இந்த ஹெட்போனில் உள்ள செமி ட்ரான்ஸ்லுசென்ட் கவர் மூலம் இந்த டிவைஸின் உள் வேலைப்பாட்டைப் பார்க்க முடியும். மேலும் இது ப்ளே மற்றும் நிறுத்தல் பட்டன்களுடன் ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டு வருகிறது. இதன் ஒலி அமைப்பும் மிக பக்காவாக உள்ளது.

இந்த டிவைஸை எடுத்துச் செல்வதற்கான பெட்டி வண்ணத்துப் பூச்சி வடிவில் மிக அழகாக வருகிறது. மேலும் இந்த ஹெட்போனை மடக்கி வைக்கவும் முடியும். இதன் விலையைப் பார்த்தால் அது ரூ.8999 ஆகும்.

அடுத்ததாக வருவது ஸ்கல்கேண்டி அப்ராக் ஹெட்போன்களாகும். இந்த ஹெட்போன்களை நமது காது மடல்களில் மேல் பொருத்த வேண்டும். இவை தரமான மிகத் தெளிவான இசையை வழங்குகின்றன. இவை இரண்டு 40மிமீ ட்ரைவர்களைக் கொண்டள்ளன. இந்த டிவைஸின் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 20 முதல் 20000 வரை ஆகும். இது 32 ஓமுடன் வருகிறது.

இந்த ஹெட்போன் பொன் நிறமான ப்ளக் ப்ளேட்டும் மற்றும் மென்மையான இயர் பில்லோக்களும் கொண்டு வருகின்றன. அதனால் பல மணி நேரம் இந்த ஹெட்போனை நமது காதுகளில் பொருத்தி இசை கேட்டாலும் அது காதுகளுக்கு எரிச்சலையோ அல்லது வலியையோ ஏற்படுத்தாது. மேலும் இது கீழே விழுந்தாலும் இது எளிதாக உடைவதில்லை. இந்த அப்ராக் ஹெட்போனின் விலை ரூ.1599 ஆகும்.

அடுத்ததாக ஸ்கல்கேண்டி பிக்ஸ் ஹெட்போன்களை எடுத்துக் கொண்டால் அது தரமான பொருள்களால் தயாரிக்கப்பட்டு மிக உயர்தர ஒலி அமைப்பை வழங்குகிறது. இதன் டிஸைன் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. இது 3.5 எம்எம் ஜாக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் எடை மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் நாம் நடக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ இதை அணிந்த சென்றாலும் அது நமக்கு தொந்தரவாக இருக்காது. இந்த ஹெட்போனின் விலையைப் பார்த்தால் அது ரூ.3899 ஆகும்.

இறுதியாக வருவது ஸ்கல்கேண்டி ஹெவி மாடல் ஹெட்போன் ஆகும். இது வண்ணத்து பூச்சி வடிவில் மிக அழகாக இருக்கிறது. மேலும் இதன் எடையும் மிகக் குறைவே. ஆனால் இதில் இருக்கும் ஒலி அமைப்போ மிக அபாரமாக இருக்கும். இதிலிருக்கும் பெரிய ட்ரைவர்கள் மிக அதிரடியான இசையை வழங்குகின்றன. மேலும் இதில் இன்பில்ட் மைக்ரோபோனும் உள்ளது. இதன் விலை ரூ.4599 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot