பல வண்ண கலவைகளில் அசத்தும் புதிய ஹெட்போன்!

பல அட்டகாசமான ஹெட்போன்கள் இப்போது சந்தையில் பல அளவுகளில் பல டிசைன்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சில ஹெட்போன்கள் மட்டுமே தரமான ஒலி அமைப்பை வழங்குகின்றன. அந்த வகையில் ஸ்கல்கேன்டி நிறுவனம் ஒரு புதிய தரமான ஹெட்போனை களமிறக்குகிறது.
கடந்த வாரம் நடந்த லாஸ் வேகாஸ் நுகர்வோர் கண்காட்சியில் தனது மிக்ஸ் மாஸ்டர்ஓவர் என்ற புதிய ஹெட்போனை அறிமுகப்படுத்தியது இந்த ஸ்கல்கேன்டி நிறுவனம். இந்த புதிய ஹேட்போன் மிகத் தரமான ஒலி அமைப்புடன் மனதைக் கொள்ளை அடிக்கும் வகையில் பலவிதமான வண்ணங்களில் வருகிறது.
இந்த மிக்ஸ் மாஸ்டர்ஓவர் ஹெட்போனின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது மிகத் தரமான மற்றும் துல்லியமான இசையை வழங்கக்கூடியது. இது ஒரு யூசர் ப்ரன்டில் ஹெட்போன் ஆகும். இதில் டூவல் கேபிள், ஒன் டச் மியூட் மற்றும் சிஙகிள் சேனல் க்யூ கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. இதில் உள்ள 50மிமீ ஸ்பீக்கர்கள் சூப்பரான ஒலியை வழங்கும். மேலும் இது பில்ட் இன் மைக்ரோபோனோடு இன்டர் சார்ஜபுள் கேபிள்களுடன் வருகிறது. மேலும் பொன் தகட்டு கனெக்டர்களும் இந்த ஹெட்போனில் உண்டு.
இந்த மாஸ்டர்ஓவர் ஹெட்போனின் டிசைனைப் பார்த்தால் அது ஸ்டேன்டர்டு டிஸைனைக் கொண்டிருக்கிறது. இதன் இயர் கப்புகள் பெரியதாக உள்ளதால் காதுகள் முழுவதையும் மறைத்துக் கொள்ளும். அதே நேரத்தில் காதுகளில் கச்சிதமாகப் பொருந்தும். இது முழுமையாகக் காதுகளை மறைத்து விடுவதால் வெளிப்புறத்திலிருந்து வரும் சத்தம் மற்றும் இரைச்சல்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால் தடையில்லா இசையை இதில் அனுபவிக்க முடியும். மேலும் இதன் ஹெட்பேன்ட் வளைவாக இருப்பாதால் தலையில் மிக அருமையாக அமர்ந்து கொள்ளும். அதனால் தலையை அசைத்தாலும் இது கீழே விழாது.
இந்த ஹெட்போனில் உள்ள வண்ண ஸ்கீம்கள் இந்த மாஸ்டர்ஓவர் ஹெட்போனுக்கு அதிகச் சிறப்பை வழங்குகின்றன. அதாவது இந்த ஹெட்போன் கருப்பு நிறத்தில் வந்தாலும் அது பல வண்ண க்ராபிக்ஸ் வசதிகளை வழங்குகிறது. அதனால் விருப்பமான ஹெட்போனைத் தேர்ந்து கொள்ளலாம். மேலும் இந்த டிவைஸை எடுத்துச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும்.
அடுத்ததாக இந்த ஹெட்போன் மைலர் ட்ரைவர்களைக் கொண்டிருப்பதால் இது சூப்பரான ஒலி அமைப்பை வழங்குகிறது. இதன் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸைப் பார்த்தால் அது 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் ஆகும்.
இந்த ஸ்கல்கேண்டி மிக்ஸ் மாஸ்டர் ஹெட்போனின் விலை ரூ.11000 ஆகும்.


Click it and Unblock the Notifications