'சிக்'குன்னு இருக்கும் 'சில்க்' மொபைல்போன்!

Posted By: Staff
'சிக்'குன்னு இருக்கும் 'சில்க்' மொபைல்போன்!

சில்க் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது போலும். ஆம், நாம் சொல்வது மார்க்கெட்டை கலக்க சில்க் என்ற பெயரில் வந்துள்ள மொபைலை பற்றித்தான். இந்த மொபைலின் தோற்றம் பார்க்க படு செக்ஸியாக இருக்கிறது.

இந்த மொபைலை சிக்ட்(எஸ்ஐசிடி)நிறுவனம்தான் அறிமுகம் செய்திருக்கிறது. டியூவல் சிம் கார்டுகள் பொருத்தும் வசதிகொண்ட இந்த புதிய மொபைல்போன் 2.8 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது.

இந்த மொபைல்போனில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் கேமரா 20 பிரேம் வேகத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொடுக்கும்.

மேலும், ஹெட்போன் மற்றும் கூடுதல் ஸ்பீக்கர்களை இணைத்து பாடல்கள் கேட்பதற்காக 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் இருக்கிறது.

இதில், யுஎஸ்பி போர்ட் இணைப்பு வசதியும், புளூடூத் வசதியும் உள்ளது. இதன் மெமரி திறனை 32 ஜிபி வரை விரிவுப்படுத்திக்கொள்ள முடியும்.

கார் ரெக்கார்டர், ஜிபிஆர்எஸ் தொடர்பு வசதிகளும் உள்ளன. இந்த மொபைல்போன் எம்பி3,டபிள்யூஓவி,ஏஎம்ஆர் உள்ளிட்ட ஆடியோ பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும். இந்த போன் ரூ.2,700 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot