சென்ஹைசரின் அம்சமான பலவித ஹெட்போன்கள்

Posted By: Karthikeyan
சென்ஹைசரின் அம்சமான பலவித ஹெட்போன்கள்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மிகவும் பிரபலமான சென்ஹைசர் என்ற ஆடியோ நிறுவனம் ஆப்பிள் மற்றும் சாம்சங் கேலக்ஸி சாதனங்களுக்கான புதிய இன் இயர் ஹெட்போன்களைக் களமிறக்கி இருக்கிறது. இந்த போன்களுக்கு ஐஇ 800 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அதோடு இந்த ஹெட்போன்களையும் தவிர்த்து வேறுசில் கேமிங் ஹெட்போன்களையும் இந்த நிறுவனம் களம் இறக்க இருக்கிறது.

இந்த புதிய ஐஇ 800 ஹெட்போன் மிகத் தரமான மற்றும் துல்லியமான இசையை வழங்கும் என்று சென்ஹைசர் நிறுவனம் கூறியிருக்கிறது. ஆப்பிள் மற்றும் சாம்சங் கேலக்ஸி ரசிகர்கள் தங்களது மொபைல் சாதனங்களில் இந்த ஹெட்போன்களை இணைத்து சூப்பரான இசையைக் கேட்கலாம்.

சென்ஹைசர் ஐஇ 800 ஹெட்போன் மிகச் சிறிய வடிவில் மிக அழகாக இருக்கும். அதோடு பேஸ் இசையும் இதில் அருமையாக இருக்கும். அடுத்ததாக சென்ஹைசர் சிஎக்ஸ்890ஐ என்ற ஹெட்போனையும் சென்ஹைசர் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஹெட்போன் ஐபோனுக்கான இன்-லைன் கண்ட்ரோலையும் வைத்திருக்கிறது.

மேலும் சென்ஹைசர் யு320 என்று பெரிய ஹெட்போனையும் சென்ஹைசர் களமிறக்க இருக்கிறது. இந்த ஹெட்போன்களில் வெளிப்புறத்தில் இருந்து செல்லும் சத்தங்கள் கேட்கமால் இசை மிகத் துல்லியமாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போன் வீடியோ விளையாட்டு விளையாடும் போது மிக அருமையாக இருக்கும்.

இந்த போன்களின் விலை மற்றும் விற்பனைக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot