சென்ஹைசர்-அடிடாஸ் கூட்டணியில் புதிய ஹெட்போன்கள்!

By Super
|
சென்ஹைசர்-அடிடாஸ் கூட்டணியில் புதிய ஹெட்போன்கள்!

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டுகளுக்கு சரியான ஆக்ஸசெரீஸ்களாக ஹெட்போன்கள் கருதப்படுகின்றன. எனவே, பல முன்னணி நிறுவனங்கள் புதிய வசதிகள் கொண்ட தரமான ஹெட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அடக்கமான, அதே நேரத்தில் ஸ்டைலான, உயர்தரமுள்ள ஹெட்போன்களைத் தேர்ந்து எடுப்பது என்பது சற்று சிரமமான காரியம் ஆகும். ஆனாலும் பிரபல நிறுவனங்களின் ஹெட்செட்டுகள் மிகத் தரமான ஹெட்போன்களை வழங்குகின்றன. அவற்றில் 2 நிறுவனங்கள் குறிப்பாக சென்ஹைசர் மற்றும் அடிடாஸ் போன்றவை மிகத் தரமான, ஸ்டைலான ஹெட்போன்களை அறிமுகப்படுத்துகின்றன.

சென்ஹைசர் நிறுவனம் எலக்ட்ரானிக் துறையில் பெயர் பெற்று இருக்கிறது. அதே நேரத்தில் அடிடாஸ் நிறுவனம் விளையாட்டுத் துறையில் முத்திரை பதித்து இருக்கிறது. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்திற்காக சென்ஹைசர் நிறுவனம் சிஎக்ஸ் 215 மற்றும் எம்எக்ஸ் 365 ஆகிய 2 ஹெட்போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஹெட்போன்கள் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, வென்கலம் மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் வருகின்றன.

சிஎக்ஸ் 310ன் விலை ரூ.2000 ஆகும். அதே நேரத்தில் எம்எக்ஸ் 365ன் விலை ரூ.2000ஐ விட குறைந்ததாகும்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் சென்ஹைசர் அடிடாஸ் ஒரிஜினலோடு வர்த்தக ஒப்பந்தம் கொண்டு ஏற்கனெவே கூறிய ஹெட்போன்களைத் தவிர்த்து மேலும் புதிய 2 ஹெட்போன்களை வழங்குகிறது. அவற்றின் பெயர்கள் முறையே எச்டி 25 மற்றும் எச்டி 220 ஆகும்.

இந்த சிஎக்ஸ்310 மற்றும் எச்டி220 ஆகிய ஹெட்போன்கள் அடிடாசின் ஊதா நிறத்தில் வருகிறது. இந்த ஹெட்போன்கள் பழைய ஸ்டைலில் இருக்கிறது என்ற விமர்சனங்கள் வந்தாலும் இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. அதே நேரத்தில் எச்டி 220 ஹெட்போன்கள் மிகவும் அருமையாக அதே நேரத்தில் அடக்கமாக, இனிமையான ஸ்டீரியோ இசையுடன் வருகிறது.

இந்த ஹெட்போன்களின் இயர்பேடுகள் பல்வித அளவுகளில் மிகவும் சரியாகப் பொருந்தக் கூடிய வகையில் வருகின்றன. மேலும் இவை இரைச்சலைத் தடுக்கும் வசதியையும் கொண்டுள்ளன. மேலும் இந்த புதிய ஹெட்போன்கள் இசைக்கு உறுதியான உத்திரவாதம் வழங்கும் என்பது உறுதி.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X