நவீன வசதிகளுடன் அசத்தலான ஸ்டைலில் புதிய ஹெட்போன்!

Posted By: Karthikeyan
நவீன வசதிகளுடன் அசத்தலான ஸ்டைலில் புதிய ஹெட்போன்!

புதிய ஸ்டைலில் பெரிய வாக்குறுதிகளுடன் தனது புதிய ஹெட்போனை கடந்த வாரம் நடந்த நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது சென்ஹைசர் நிறுவனம். இந்த ஹெட்போன் மிகத் தரமான ஒலி அமைப்புடன் அதே நேரத்தில் மிக உறுதியுடன் வருகிறது. இந்த புதிய சென்ஹைசர் ஹெட்போனின் பெயர் எச்டி 25 ஆம்பீரியர் ஆகும். இது ஒரு டிஜே ஸ்டைலில் வந்திருக்கும் ஒரு ஹெட்போன் ஆகும்.

இந்த எச்டி ஹெட்போனின் முக்கிய அம்சங்களாகப் பார்த்தால் இது நியோடிமும் மேக்னட்டுகளைக் கொண்டுள்ளது. அதனால் இது இயற்கையான மிக உறுதியான மற்றும் துல்லியமான ஒலி அமைப்பு வழங்கும். இதன் ப்ரீக்வன்சி ரெஸ்பான்ஸ் 16 ஹெர்ட்ஸ் முதல் 22000 ஹெர்ட்ஸ் வரை உள்ளது. இந்த ஹெட்போனின் மிக உயர்ந்த ஒலி அழுத்தம் 120டிபி ஆகும். அதாவது இது 1 கிலோ ஹெர்ட்ஸ் ஆகும். அதுபோல் இதன் இம்பீடன்ஸ் 18 ஓம்களாகும்.

இந்த எச்டி ஹெட்போன் கருப்பு அல்லது வெள்ளி நிறத்தில் வருகிறது. அதனால் இது எளிதில் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்துவிடும். அதுபோல் இதன் ஹெட்பேண்டும் தலையில் அணிவதற்கு ஏதுவாக இருக்கும். எரிச்சல் தராது. மேலும் இதன் இயர் கப்புகள் உயர்தரத்தில் இருப்பதால் இவற்றை காதுகளில் அணியும் போது மிக சொகுசாக இருக்கும். மேலும் இந்த இயர்கப்புகளில் இருந்து வரும் இசை வாடிக்கையாளர்களை தனி உலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.

அடுத்ததாக இந்த ஆம்பீரியர் ஹெட்போன் 1.2 மீ கேபிளையும் வழங்குகிறது. அதனால் இந்த ஹெட்போனை டிவைசிலிருந்து மிக எளிதாக கழற்ற முடியும். மேலும் இதில் ரிமோட் வசதியும் உள்ளது. இந்த ஹேட்போனை ஐபாட், ஐபோன் மற்றும் ஐபேட் போன்ற ஆப்பிள் டிவைஸ்களில் இணைக்க முடியும். மேலும் இதில் 3.5மிமீ ஆடியோ ஜாக்கும் உண்டு.

மார்ச் மாதம் முதல் இந்த சென்ஹைசர் ஹெட்செட் விற்பனைக்கு வந்துவிடும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இது சூப்பரான இசையைத் தரும் என்பது உறுதி.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot