டாப் 10 வீடியோ கேம் சாதனங்கள் - சுவாரஸ்ய சர்வே

Posted By: Karthikeyan
டாப் 10 வீடியோ கேம் சாதனங்கள் - சுவாரஸ்ய சர்வே

விற்பனைக்கு வருவதற்கு முன்பாகவே இரண்டு முக்கிய கேம் டிவைஸ்கள் கோதாவில் இறங்கிவிட்டன. குறிப்பாக கேமிங் டிவைஸ்களைத் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களான நின்டென்டோ மற்றும் சிகா ஆகிய நிறுவனங்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. அவர்கள் மிகச் சிறந்த கேமிங் டிவைஸ்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

இப்போது ப்ளேயர்.காம் கேம் பிரியர்கள் மற்றும் பொது மக்களிடன் தங்களுக்கு பிடித்தமான கேமிங் டிவைஸ்களைப் பற்றிய ஒரு சர்வே எடுத்தது. குறப்பாக இந்த சர்வே பிரிட்டனில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 1411 நபர்களிடன் எடுக்கப்பட்டது. அவர்கள் தமக்குப் பிடித்தமான கேமிங் டிவைசை கூறுமாறு கேட்கப்பட்டார்கள். அவர்களில் 61 சதவீதம் பேர் தமக்கு பிடித்தமான கேமிங் டிவைசாக சிகா மெகா ட்ரைவை என்று கூறினர்.

இந்த டிவைஸ் 1988ல் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு 1989ல் அமெரிக்காவிற்கு வந்தது. இதற்கு சிகா ஜெனசிஸ் என்ற பெயரும் கொடுக்கப்பட்டது. 1988லிருந்து இன்று வரை 8 மில்லியன் சிகா ஜெனசிஸ் ட்ரைவ்கள் விற்பனை ஆகியிருக்கின்றன. இந்த டிவைசில் பலவகையான கேம்களையும் அதே நேரத்தில் க்ராபிக்சையும் சப்போர்ட் செய்யும். அதனால் இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த டிவைசில் மணி கணக்காக கவலையை மறந்து விளையாடலாம்.

அடுத்த முக்கிய கேம் டிவைஸ் நின்டென்டோ 64 ஆகும். இந்த 64 பிட் டிவைஸ் 1996ல் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் 1977ல் ஐரோப்பாவுக்கு வந்தது. குறிப்பாக பல நிறுவனங்கள் சிடியிலிருந்து டிவிடிக்கு மாறிக் கொண்டிருந்த போது இந்த டிவைஸ் வந்தது. ஆனாலும் இது விற்பனையில் சாதனை படைத்ததோடு ஏராளமான கேமிங் பிரியர்களையும் பெற்றது. இந்த டிவைஸ் கேர்ட்ரிட்ஜ் அடிப்படையில் உள்ள டிவைஸ் ஆகும். இதற்கு அடுத்து டிவிடி மற்றும் ப்ளூ-ரே வந்தன.

அடுத்த முக்கிய கேமிங் டிவைஸ் என்னவென்றால் அது அட்டரி 2600 ஆகும். அது ப்ளேஸ்டேசனுக்கு அடுத்தபடியாக வருகிறது. 90களில் வீடியோ கேம்கள் மிக வேகமாக வளர்ச்சி பெற்ற போது ஏராளமான நிறுவனங்கள் தங்களது கேமிங் டிவைஸ்களைக் களமிறக்கின. குறிப்பாக அடக்கமான கேம் டிவைஸ்கள் மக்களிடன் பேராதரவைப் பெற்றன.

நின்டென்டோ நிறுவனமும் தனது கேம்பாய்ஸ், நின்டென்டோ என்டர்டெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் சூப்பர் நின்டென்டோ என்டர்டெய்ன்மென்ட் சிஸ்டம் போன்ற கேமிங் டிவைஸ்கள் மூலம் கேம் பிரியர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றது. குறிப்பாக இவை 6 மற்றும் 7வது இடத்தைப் பிடித்தன. இதற்கு அடுத்ததாக சிகா கேம் கியர் மற்றும் நியோ-ஜியோ ஆகியவை 8 மற்றும் 9வது இடத்தைப் பிடித்தன. சிகா மாஸ்டர் சிஸ்டம்ஸ் 10வது இடத்தைப் பிடித்தன.

இந்த சர்வேயின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியமான விஷயம், தங்களுடைய சிறிய வயது கேமிங் அனுபவங்களை இன்னும் அசை போட்டுக் கொண்டிருப்பதாக பல கேம் பிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot