Home
Music

சேடெக்கி வழங்கும் குட்டி பாக்கெட் ஸ்பீக்கர்!

By Karthikeyan
சேடெக்கி வழங்கும் குட்டி பாக்கெட் ஸ்பீக்கர்!

சேடெக்கி நிறுவனம் புதிதாக சேடெக்கி பிடி என்ற ஒரு பாக்கெட் வயர்லஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்பீக்கரை நாம் மிக எளிதாக சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளில் போட்டுக் கொள்ளலாம்.

இந்த வயர்லஸ் ஸ்பீக்கர் சேடெக்கியின் தனித்துவமான போல்ட் அவுட் ரிசொனேட்டர் தொழில் நுட்பத்துடன் வருகிறது. இந்த ரிசொனேட்டரி இந்த ஸ்பீக்கருக்கு அற்புதமான பேஸ் இசையை வழங்குகிறது.

இந்த சேட்ஜி வயர்லஸ் ஸ்பீக்கரின் டிசைன் மிக அற்புதமாக உள்ளது. இது வட்ட வடிவமாக உருண்டை வடிவில் உள்ளது. இதன் பட்டன்கள் பார்ப்பதற்கு தெரியாத வகையில் மறைவாக உள்ளன.

அதாவது இந்த வயர்லஸ் ஸ்பீக்கரின் உச்சியில் வட்ட வடிவமான சிறிய இடம் உண்டு. அதை சுழற்றினால் அதில் ரிசொனேட்டரைப் பார்க்கலாம். இந்த ஸ்பீக்கர் யுஎஸ்பி முதல் மினி யுஎஸ்பி கேபிள் வரைக் கொண்டிருப்பதால் இதை மிக எளிதாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக ஒரு பவுச்சும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்பீக்கரை ஐபோன்கள் மற்றும் மொபைல் போன்களில் மிக எளிதாக இணைக்க முடியும்.

குறிப்பாக ப்ளூடூத் வசதி கொண்ட மொபைல் போன்களில் இந்த ஸ்பீக்கரை மிக எளிதாக இணைக்க முடியும். இந்த ஸ்பீக்கரின் ஒலி அமைப்பும் நன்றாக உள்ளது. ஆனால் இந்த ஸ்பீக்கர் மிகச் சிறியதாக உள்ளதால் மிகுந்த உயர் தர இசையை இந்த ஸ்பீக்கரில் எதிர்பார்க்க முடியாது. மேலும் இந்த ஸ்பீக்கர் மூலம் அழைப்புகளை எடுக்கலாம் அதுபோல் அழைப்புகளை நாம் கொடுக்கலாம்.

மொத்தத்தில் இந்த குட்டி ஸ்பீக்கர் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த சேட்ஜி ஸ்பீக்கரின் விலை ரூ.2,400ஆக இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X