Home
Music

அலங்கரிக்கும் சான்சா சான்டிஸ்க்கின் புதிய எம்பி-3 ப்ளேயர்

By Super
அலங்கரிக்கும் சான்சா சான்டிஸ்க்கின் புதிய எம்பி-3 ப்ளேயர்
இசைப் பிரியர்களின் கனவாக புதிய சான்சா சான்டிஸ்ட் எம்பி-3 ப்ளேயர் மாறியுள்ளது. இந்த புதிய சான்டிஸ்க் பெரிய 1.1 இன்ச் எல்சிடி திரையுடன் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இது பல வசதிகளுடன் வருவதால் கண்டிப்பாக இது இசைப் பிரியர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கும் என நம்பலாம்.

இந்த புதிய சான்சா மியூசிக் ப்ளேயர் ஒரு நவீன் கலவையாகும். அதாவது இதன் பழைய வடிவம் எல்லோராலும் வரவற்கப்பட்டாலும் அதன் செயல்பாட்டில் அது எந்த ஒரு காம்ப்ரமைசும் செய்யவில்லை. இந்த புதிய ப்ளேயர் இண்டக்ரேட்டட் எப்எம் ரேடியோ வசதியை வழங்குகிறது. அதேபோல் இதில் ஸ்டாப் வாட்ச் உள்ளது. அதோடு இதை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக கைபிடியும் உள்ளது.

சான்சா இன்பில்ட் 4ஜிபி மற்றும் 8ஜிபி மெமரியுடன் வருகிறது. மேலும் இதன் மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். அதோடு மைக்ரோ எஸ்டிஎச்சி கார்டும் இதில் பயன்படுத்தலாம். மேலும் வாய்ஸ் ரிக்கார்டிங்கிற்காக இது இன்பில்ட் மைக்ரோ போனும் கொண்டுள்ளது. 15 மணி நேரம் தாங்கக் கூடிய சக்தி வாய்ந்த பேட்டரியும் இதன் முக்கிய சிறப்பாகும். மற்று ஹார்ட்வோர்களோடு சின்க்ரோனைஸ் செய்ய வசதியாக பளூடூத்தும் உள்ளது.

இந்த சான்சா ப்ளேயர் கருப்பு, ஊதா, க்ரே, ஆரஞ்சு, பர்ப்புள் மற்றும் வெள்ளை போன்ற நிறங்களில் அழகாக வருகிறது. அதே போல் நீடித்த ஆயுளைக் கொண்டிருக்கிறது. மேலும் ஆன்லைன் மூலம் டிஜிட் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்ய முடியும்.

அது போல் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் இந்த அப்ளிகேஷன்களை பரிமாற்றம் செய்ய முடியும். அதேபோல் தொழில் நுட்ப சப்போர்ட்டையும் பதிவிறக்கம் செய்ய முடியும். இதன் விலை மிகவும் மலிவாக இருக்கிறது. அதாவது 4ஜிபி கொண்ட சான்சா ப்ளேயர் ரூ.2,500க்கும், 8ஜிபி கொண்ட சான்சா ப்ளேயர் ரூ.3,500க்கும் கிடைக்கிறது. மலிவு விலையில் சான்டிஸ்க் இருந்தாலும் இதன் செயல் திறன் மற்ற மலிவு விலை டிவைஸ்களை விட வலிமையானது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X