Home
Music

ஆயிரம் ஆயிரம் பாடல்களை கேட்டு மகிழ புதிய இசைப் பேழை

By Karthikeyan
ஆயிரம் ஆயிரம் பாடல்களை கேட்டு மகிழ புதிய இசைப் பேழை

சாம்சங் சமீபத்தில் ஒரு புதிய இசைப் பேழையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த இசைப் பேழைக்கு எஸ்-பெப்பிள் எம்பி3 ப்ளேயர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய இசைப் பேழை சாம்சங் பெப்பிள் வரிசையில் வரும் புதிய எம்பி3 ப்ளேயர் ஆகும். இந்த இசைப் பேழை ஹைபர் க்ளேஸ் கலரிங் யூனிட்டுடன் வருகிறது. மேலும் இதில் பல நுண்ணிய தொழில் நுட்பங்களும் உள்ளன.

வித்தயாசமகத் தோற்றமளிக்கும் இந்த இசைப் பேழையில் 4ஜிபி மெமரி உள்ளது. இதன் பேட்டிரி 17 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. அதுபோல் இதில் இயற்கையான டிஜிட்டல் ஒலி அமைப்பு உள்ளதால் இதை இசை கேட்பது சூப்பராக இருக்கும்.

மேலும் ஆர்ம் க்ளிப், ஆடியோ ப்ளேபேக் வசதி, ஸ்டீரியோ சவுண்ட் அவுட்புட் மோட், யுஎஸ்பி போன்ற வசதிகளும் இந்த இசைப் பேழையில் உள்ளன.

இதன் லித்தியம் பேட்டரியை மிக எளிதாக ரிசார்ஜ் செய்ய முடியும். இந்த இசைப் பேழையில் ஆயிரக்கணக்கான ராகங்களை பதிவு செய்ய முடியும். மேலும் இந்த இசைப் பேழை மார்பிள் வெள்ளை மற்றும் பெப்பிள் ஊதா ஆகிய வண்ணங்களில் அம்சமாக வருகிறது.

இந்த இசைப் பேழையை தலைக்கு மேல் அணிந்து கொள்ளலாம். அதனால் காலை வேளையில் நடை பயிற்சி அல்லது ஒட்டப் பயிற்சி செய்யும் போது இந்த இசைப் பேழையைத் தலையில் அணிந்து கொண்டு பாடல்களை ரசித்துக் கொண்டு களைப்பில்லாமல் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இந்த இசைப் பேழையில் ஐபோடு மற்றும் ஐபோடு நானோ போன்றவற்றை மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம். குறிப்பாக சாம்சங் காலக்ஸி எஸ் III ரசிகர்களுக்கு இந்த இசைப் பேழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதில் யுஎஸ்பி வசதி உள்ளதால் இதில் உள்ள பாடல்களை மற்ற சாதனங்களுக்கு அனுப்பவும் முடியும். அதுபோல் இந்த இசைப் பேழையை கணினிகளில் நேரடியாக இணைக்கவும் முடியும்.

இந்த புதிய சாம்சங் இசைப் பேழையின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் தெரியவில்லை. ஆனால் இப்போதே சாம்சங் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த புதிய இசைப் பேழை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X