Home
Music

மேம்படுத்தப்பட்ட கேமராக்களை வெளியிடும் சாம்சங்!

By Karthikeyan
மேம்படுத்தப்பட்ட கேமராக்களை வெளியிடும் சாம்சங்!

சாம்சங் தனது பிராண்டில் பல புதிய கேமராக்களை வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது. அவற்றில் ஒன்றாக என்எக்ஸ்200 என்ற கேமராவை அறிவித்திருக்கிறது. இது புதுப்பிக்கப்பட்ட ரெட்ரோ ஸ்டைலில் உள்ள ஒரு கேமரா ஆகும். அதாவது இதன் பழைய என்எக்ஸ்200 கேமரா மிகவும் குறைந்த பேட்டரி ஆயுளைக் கொண்டதாகும்.

ஆனாலும் அது தரமான படங்களை எடுக்கும் சக்தியைக் கொண்டது. ஆனால் புதிய ஆர்எஸ் என்எக்ஸ்200 கேமரா பழையதை விட அதிக சக்தி வாய்ந்தது. இதன் பாடியில் குரோம் பிளேட் உள்ளது.

இந்த ரெட்ரோ ஸ்டைலை பிஜி பிலிம்சின் வெற்றிகரமான கேமராக்கள் மூலம் சாம்சங் பெற்றது. மேலும் இந்த சாம்சங்கின் பழைய என்எக்ஸ் கேமரா வர்த்தக அளவில் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனாலும் பிஜி அளவிற்கு இல்லை. ஏனெனில் சாம்சங் கேமராவில் ஒரு சில குறைபாடுகள் இருந்தன என்பது உண்மைதான்.

அதனால் இப்போது அந்த குறைபாடுகளை சரி செய்து என்எக்ஸ்200 கேமராவை வழங்குகிறது. இந்த கேமரா ஒரு காம்பெக்ட் கேமரா ஆகும். இது 20.3 எபிஎஸ்-சி சென்சார் கொண்டு வருகிறது. இந்த கேமரா எச்டி வீடியோவை மிகத் துல்லியமாக எடுக்கும் வசதி கொண்டது.

மேலும் இந்த கேமராவை அடுத்த இடத்திற்கு எடுத்துச் செல்லவும் சாம்சங் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் அதற்காக சாம்சங்கிற்கு சில காலம் தேவைப்படும். தற்போது இந்த என்எக்ஸ்200 ஆர்எஸ் கேமராவைப் பற்றி நிறைய தகவல்கள் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த ஜனவரிக்குள் வந்துவிடும் என்று தெரிகிறது. மேலும் இந்த கேமரா ஜப்பான் போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X