Home
Music

ஐபோன் 5க்கு போட்டியாக சாம்சங் களமிறக்கும் கேலக்ஸி எஸ்3 மினி

By Karthikeyan
ஐபோன் 5க்கு போட்டியாக சாம்சங் களமிறக்கும் கேலக்ஸி எஸ்3 மினி

சாம்சங்கின் கேலக்ஸி எஸ்3 போன் விற்பனையில் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த போனின் சிறிய வடிவமாக கேலக்ஸி எஸ்3 மினி என்ற புதிய போனை சாம்சங் கடந்த மாதம் அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இந்த போன் இங்கிலாந்து சந்தைகளில் விற்பனைக்கு வந்திருக்கிறது. அதுபோல் retailereBay.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமாக ரூ.26,999 செலுத்தி இந்த போனை வாங்கலாம்.

ஆப்பிள் தனது ஐபோன் 5ஐ களமிறக்கிய பின்பு சாம்சங் தனது எஸ்3 மினி போனைக் களமிறக்கி இருக்கிறது. அதனால் இந்த போன் கண்டிப்பாக ஐபோன் 5க்கு போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக தொழில் நுட்ப வசதிகளைப் பொருத்த மட்டில் இந்த எஸ்3 மினி கூகுளின் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருகிறது. அதனால் ஆன்ட்ராய்டு ரசிகர்கள் கண்டிப்பாக இந்த போனை விரும்புவார்கள். அதோடு இதன் 4 இன்ச் அமோலெட் கப்பாசிட்டிவ் தொடுதிரை மிகவும் துல்லியமாக இருக்கும்.

மேலும் இந்த எஸ்3 மினி போன் 1 ஜிஹெர்ட் டூவல் கோர் ப்ராசஸரில் வருவதால் இதன் வேகமும் அமர்க்களமாக இருக்கும். கேமராவைப் பொருத்த மட்டில் இந்த போனின் பின்புறம் ஒரு 5எம்பி கேமரா உள்ளது. அதுபோல் வீடியோ உரையாடலுக்காக இந்த போனின் முகப்பில் ஒரு விஜிஎ கேமராவும் உள்ளது.

இந்த எஸ்3 மினி போன் 8ஜிபி மற்றும் 16ஜிபி ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் மெமரியை 32ஜிபி அளவிற்கு விரிவுபடுத்த முடியும். ஆனால் retailereBay.in தற்போது 8ஜிபி மாடலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

இந்த எஸ்3 மினி போனில் ஏராளமான இணைப்பு வசதிகள் உள்ளன. குறிப்பாக எச்எஸ்டிபிஎ 21 எம்பிபிஎஸ், எச்எஸ்யுபிஎ 5.76 எம்பிபிஎஸ், வைபை, டிஎல்என்எ, வைபை டைரக்ட், எ2டிபி மற்றும் இடிஆருடன் கூடிய ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, என்எப்சி போன்ற எல்லா இணைப்பு வசதிகளையும் இந்த போனில் அனுபவக்கலாம்.

மேலும் இந்த போனில் எஸ் வாய்ஸ், ஸ்மார்ட் ஸ்டே, டைரக்ட் கால், பட்டி போட்டோ ஷேர் மற்றும் எஸ் பீம் போன்ற அப்ளிகேசன்களும் உள்ளன. மொத்தத்தில் ஐபோன் 5க்கு இந்த போன் கண்டிப்பாக போட்டியாக இருக்கும் என்று கருதலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X