நவீன வசதிகளுடன் சாம்சங் வழங்கும் புதிய மியூசிக் ப்ளேயர்!

சாம்சங் கேலக்ஸி ப்ளேயர் 70 ப்ளஸ் என்பது சாம்சங்கின் புதிய நவீன மீடியா ப்ளேயர் ஆகும். இது ஒரு சாதாரண மியூசிக் ப்ளேயர் அல்ல. ஏனெனில் இந்த புதிய சாதனம் அதிநவீன தொழில் நுட்பங்களையும் மற்றும் அதிக சக்தி வாய்ந்த ப்ராசஸரையும் கொண்டுள்ளது. இந்த புதிய சாதனம் சாம்சங் கேலக்ஸ் ப்ளேயர் 50க்கு அடுத்து வந்திரு்ககும் சாதனம் ஆகும். அதனால் இந்த புதிய சாதனம் பல மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களுடன் வருகின்றது.
இந்த புதிய சாதனம் சாம்சங் கேலக்ஸி நோட்டின் டிசைனை ஒத்திருக்கிறது. ஆனால் இதை இயக்கி பார்த்தால்தான் இதன் தனித்துவத்தை அறிய முடியும்.
இந்த சாம்சங் கேலக்ஸி ப்ளேயர் 70 ப்ளசின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது 5 இன்ச் கப்பாசிட்டிவ் தொடு வசதி கொண்ட டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இதன் ப்ராசஸரைப் பார்த்தால் 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது.
இதன் பின்புறம் 5 மெகா பிக்சல் கேமரா உள்ளது. இணைப்பு வசதிகளுக்காக இந்த சாதனம் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், வைபை, ப்ளூடூத் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த 70 ப்ளஸ் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. எப்எம் ரேடியோவும் இதில் உண்டு. மின் திறனிற்காக இந்த சாதனம் 2500 மெகா ஹெர்ட்ஸ் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.
இதன் 5 இன்ச் டிஸ்ப்ளேயில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகத் தெளிவாக இருக்கும். அதுபோல் வீடியோ கேம்களையும் மிகச் சிறப்பாக விளையாட முடியும். அதுபோல் இதன் ப்ராசஸரும் மிக வேகமாக இயங்கும்.
இந்த சாம்சங் கேலக்ஸி ப்ளேயர் 70 ப்ளஸ் 16ஜிபி மற்றும் 32ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது. 16ஜபி ரூ.18000க்கும், 32ஜிபி 21000க்கும் விற்கப்பட இருக்கிறது. முதலில் இந்த சாதனம் தென் கொரியாவில் அறிமுகப்படுத்தப்படும். பின் உலகம் முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications