சாம்சங் கேலக்ஸி டிவைஸ்களுக்கான புதிய ஆடியோ டோக்!

Posted By: Karthikeyan
சாம்சங் கேலக்ஸி டிவைஸ்களுக்கான புதிய ஆடியோ டோக்!

சாம்சங் தனது சாம்சங் கேலக்ஸி மற்றும் ஆப்பிள் டிவைஸ்களுக்கு அதிநவீன ஆடியோ டோக்குகளை(ஆடியோ சிஸ்டம்) களமிறக்க இருக்கிறது.

இந்த ஆடியோ டோக்குகள் ஐஒஎஸ் மற்றும் கேலக்ஸி எஸ் வரிசை டிவைஸ்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். லாஸ் வேகாஸில் வரும் 13ந் தேதி நடைபெறும் நுகர்வோர் மின்னனு கண்காட்சியில் இந்த ஆடியோ டோக்குகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

சாம்சங் டிஎ-இ750க்கு ஸ்பீக்கர் டோக் சாம்சங் வெளியிட்ட முதல் ஸ்பீக்கர் டோக் என்ற பெயர் உண்டு. இந்த ஆடியோ டோக்கில் சாம்சங்கின் உயர் வாக்கும் டியூப் ஆம்ப்ளிபயர் தொழில் நுட்பம் இருப்பதால் அது மிகத் தரமான ஒலி அமைப்பை வழங்குகிறது.

டிஇ-750ல் இருக்கும் வாக்கும் டியூப் ப்ரீ ஆம்ப்ளிபயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பாக வருகிறது.

இந்த டிஇ-750 ஆடியோ டோக் ஒரு ப்ரி ஆம்ப்ளிபயர் மற்றும் பவர் ஆம்ப்ளிபயரையும் கொண்டுள்ளது. மேலும் இதில் 2.1 சோனல் ஸ்பீக்கர்களும் மற்றும் 100 வாட்ஸ் துணை ஊபரும் உள்ளன.

மற்ற வசதிகளைப் பார்க்கும் போது இந்த டோக் யூஎஸ்பி போர்ட், அனலாக் இன்புட், போர்ட்டபுள் ஹார்ட் ட்ரைவ், வயர்லஸ் ஆடியோ பைல் ப்ளேபேக் மற்றும் மியூசிக் ப்ளேயர் போன்ற வசதிகளையும் இந்த அடியோ டோக் கொண்டுள்ளது.

இந்த டிஇ-750ல் இருக்கும் 2.1 சேனல் ஸ்பீக்கர் மிகத் தரமான ஒலி அமைப்பை வழங்குகிறது. இதன் துணை ஊபர் 100 வாட்ஸ் ஒலியை வழங்குகிறது.

இதில் உள்ள மியூசிக் ப்ளேயர்கள் எம்பி3, டபுள்யுஎம்எ மற்றும் டபுள்யுஎவி பார்மட்டுகளால் சப்போர்ட் செய்யப்படுகிறது. அதுபோல் இந்த டிவைஸ் சாம்சங் கேலக்ஸி டிவைஸ்களுக்கான அல்ஷேரை பயன்படுத்துகிறது.

இந்த சாம்சங் டிஇ-750 ஆடியோ டோக் மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கு மிக உயர்தரமாக இருக்கும். இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot