இந்தியாவில் ஆன்லைன் மூலம் உலகளாவிய இசையை இலவசமாக வழங்க இருக்கும் சாவன்

Posted By: Karthikeyan
இந்தியாவில் ஆன்லைன் மூலம் உலகளாவிய இசையை இலவசமாக வழங்க இருக்கும் சாவன்

ஆன்லைன் மூலம் இலவச இசை மற்றும் பாடல்களை வழங்கி வரும் சாவன் நிறுவனம் இன்று சாவன் இங்கிலிஷ் என்ற புதிய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவையின் மூலம் உலகத் தரம் வாய்ந்த கால் மில்லியனுக்கும் அதிகமான இசை மற்றும் பாடல்களை தனது ஆன்லைன் சேவையில் களமிறக்கி இருக்கிறது.

மேலும் சாவன் ஆன்லைன் சேவை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்கும். இதுவரை சாவன் பாலிவுட் மற்றும் வட்டார திரைப்படப் பாடல்களை வழங்கி வந்தது.

ஆனால் இந்த புதிய ஆன்லைன் சேவையின் மூலம் உலகளாவிய சிறந்த ஆங்கிலப் பாடல்களை வழங்க இருக்கிறது. அதற்காக சோனி மியூசிக் மற்றும் யுனிவர்சல் மியூசிக் ஆகிய நிறுவனங்களோடு வர்த்தக உடன்படிக்கை செய்திருக்கிறது. பன்டோரா, ஸ்பாட்டிபை மற்றும் ஆர்டியோ போன்ற சேவைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்ட நிலையில் சாவனின் இந்த புதிய சேவை இந்தியாவில் கண்டிப்பாக பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சாவனின் இந்த புதிய ஆன்லைன் இலவச இசை சேவை நோக்கியாவின் மியூசிக் ஸ்டோருக்கு கடும் போட்டியைத் தரும் என்று நம்பலாம். ஏனெனி்ல நோக்கியா மியூசிக் ஸ்டோர் 4 மில்லியனுக்கும் அதிகமான இசை ட்ராக்குகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தனது சேவையை வழங்க நோக்கியா உரிமமும் பெற்றள்ளது.

ஆனால் நோக்கியா மியூசிக் ஸ்டோர் ஒரு சில குறிப்பிட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே தனது சேவையை வழங்க முடியும். ஆனால் சாவன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த இலவச ஆன்லைன் சேவையை வழங்க முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot