ஐபேட் மற்றும் ஐபோனுக்கான புதிய ஸ்பீக்கர்

ஐபோட் மற்றும் ஐபோன் போன்ற சாதனங்களுக்கான அக்சஸரிகள் பெருமளவில் படையெடுத்து வருகின்றன. அவை புதுமையாகவும், ஸ்டைலாகவும் வருகின்றன. அந்த வகையில் ராக்கட்பிஷ் என்ற நிறுவனம் ஒரு புதிய அக்சஸரியை ஐபேட் மற்றும் ஐபோனுக்காக வழங்குகிறது. சவுண்ட் பிரிசம் என்று அழைக்கப்படும் இந்த ஸ்பீக்கரை ஐபேட் மற்றும் ஐபோன்களில் மிக எளிதாக இணைக்க முடியும். இந்த ஸ்பீக்கர் சிஆர்இ8 டிசைன் ஸ்டூடியோவால் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்பீக்கர் சாதனம் கையடக்க அளவில் இருக்கிறது. குறிப்பாக ஐபேடுகள் மற்றும் ஸ்மார்ட் கவர்களை பயன்படுத்துவோருக்காக இந்த சவுண்ட் பிரிசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐபேடுகளுடன் ஸ்மார்ட்கவர்களைப் பயன்படுத்தும் போது அதில் ஒரு பகுதி பயனில்லாமல் எஞ்சி இருக்கிறது. அந்த பகுதியில் இந்த புதிய ஸ்பீக்கரைப் பொருத்திக் கொள்ளலாம். இந்த ஸ்பீக்கரில் ப்ளூடூத் வசதியும் உள்ளது. இந்த ஸ்பீக்கரை ஆப்பிள் ஸ்மார்ட் கவருக்குள் மிக எளிதாக வைத்துக் கொள்ளலாம்.
ப்ளூடூத் வசதியுடன் வரும் இந்த ஸ்பீக்கர் ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. அதுபோல் இதை ரிசார்ஜ் செய்யவும் முடியும். இந்த சவுண்ட் பிரிசஸ் ஸ்பீக்கர் மிகவும் அழகாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஸ்பீக்கர் மூலம் மிக சூப்பரான இசையை அனுபவிக்கலாம். குறிப்பாக இந்த ஸ்பீக்கர் இளசுகளை வெகுவாக கவுரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.4000 ஆகும்.


Click it and Unblock the Notifications