Home
Music

புதிய மியூசிக் ப்ளேயரை களமிறக்கும் பிளாக்பெர்ரி!

By Karthikeyan
புதிய மியூசிக் ப்ளேயரை களமிறக்கும் பிளாக்பெர்ரி!

ரிம்மின் பிளாக்பெரி 10 ஸ்மார்ட்போனைப் பற்றி இணையதளங்களில் ஏராளமான வதந்திகள் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு புதிய இசைப் பேழையைக் களமிறக்குவதில் மிக மும்மரமாக இருக்கிறது ரிம் நிறுவனம். இந்த இசைப் பேழை அமெரிக்காவில் உள்ள ஆர்லேண்டோவில் நடைபெற்ற ப்ளாக்பெரி சொலுசன்ஸ் சோகேஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய இசைப் பேழைக்கு ப்ளாக்பெரி மியூசிக் கேட்வே என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேட்வேயில் ப்ளூடூத் மற்றும் என்எப்சி வசதி உண்டு. எனவே வயர்லஸ் மூலம் இதில் சூப்பரான இசையைக் கேட்டு மகிழலாம். இதன் விலை 49.99 அமெரிக்க டாலர்களாக இருக்கும். மேலும் இந்த இசைப் பேழை வரும் சூன் மாதத்தில் விற்பனைக்கு வரும்.

இந்த மியூசிக் கேட்வேயை ஒரு ஸ்டீரியோ சிஸ்டத்தில் பொருத்தி அதை ப்ளாக்பெரி ஸ்மார்ட்போனோடு இணைத்து என்எப்சி அல்லது ப்ளூடூத்தை வசதியுடன் இயக்கினால் அதிலிருந்து வரும் இசை அறை முழுவதையும் நிரப்பிவிடும். இதற்கு ரிமோட் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

இந்த ப்ளாக்பெரி மியூசிக் கேட்வே ஏற்கனவே ரிம்மின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X