Home
Music

ரூ.5,000 விலையில் அதிக வசதிகளுடன் புதிய வீடியோ கேம் சாதனம்!

By Karthikeyan
ரூ.5,000 விலையில் அதிக வசதிகளுடன் புதிய வீடியோ கேம் சாதனம்!

சிறுவர்களாக இருந்த போது வீட்டில் விளையாடிய விளையாட்டுகள் எப்போதுமே பசுமையாக இருக்கும். தற்போது வீட்டு விளையாட்டுகள் வீடியோ கேம்கள் மற்றும் கணினி விளையாட்டுகள் என்ற வடிவங்களில் வந்துவிட்டன. மேலும் விளையாட்டு சிடிக்கள் மற்றும் டிவிடிக்கள் போன்றவை ஏராளமாக கிடைக்கின்றன.

இப்போது ரெட்ரோ பிட் நிறுவனம் பழைய விளையாட்டு ஞாபகங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒரு புதிய விளையாட்டு டிவைசை அறிமுகப்படுத்துகிறது. இந்த டிவைசின் பெயர் ரெட்ரோ டூவோ போர்ட்டபுள் ஆகும். இந்த ரெட்ரோ டூவோ போர்ட்டபுள் டிவைஸ் நின்டென்டு என்டர்டெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் சூப்பர் நின்டென்டு என்டர்டெய்ன்மென்ட் சிஸ்டம்ஸ் விளையாட்டுகளை பார்மெட்டுகளை சப்போர்ட் செய்யும்.

இந்த டிவைசின் ஸ்டைல் 80 மற்றும் 90களின் நினைவுகளை ஞாபகப்படுத்தும். இதன் பட்டன்கள் வட்டமாகவும் அதே நேரத்தில் வண்ணக் கோலம் கொண்டுள்ளன. இதன் பக்கவாட்டில் ப்ரொஜக்சன்கள் உள்ளன. அதுபோல் ஒரு எல்சிடி டிஸ்ப்ளே இதன் நடுவில் உள்ளது. இதன் உச்சியில் ஒரு கேட்ரிட்ஜ் ஸ்லாட் உள்ளது. கன்ட்ரோலர் அடாப்டரைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரிஜினல் சூப்பர் நின்டென்டு கன்ட்ரோலர்களைப் பயன்படுத்த முடியும்.

இந்த டிவைசில் ஒரு துணை கண்ட்ரோலரும் உள்ளது. இதில் மல்டி ப்ளேயர் விளையாட்டுகளை அனுபவித்து விளையாடலாம். இதன் எல்சிடி திரையின் அளவு 3.5 இன்ச் ஆகும். இது மிகச் சிறந்த ரிசலூசனைக் கொண்டு பளிச்சென்று இருக்கிறது.

இந்த டிவைஸ் எந்த ஒரு துணை இல்லாமல் சூப்பர் நின்டென்டு கேம்களை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் விளையாட முடியும். ஆனால் க்ளாசிக்கான 8 பிட் விளையாட்டுகளை விளையாட வேண்டுமானால் ரெட்ரோபோர்ட் அடாப்டைப் பயன்படுத்த வேண்டும். அதன் போல் 80களின் ஒரிஜினல் நின்டென்டு விளையாட்டுகளை மிக அழகாக விளையாட முடியும்.

இன்னும் நிறைய வசதிகள் வேண்டும் என்றால் அதற்காக ஒரு துணை ரெட்ரோஜென் அடாப்டரை வாங்கிக் கொள்ளலாம். இது ஒரிஜினல் சேகா ஜெனஜிஸ் கேட்ரிட்ஜுக்களை விளையாட வைக்கும். அதாவது இந்த சிறிய டிவைஸ் எப்படிப்பட்ட விளையாட்டுகளையும் விளையாடுவதற்கு சப்போர்ட் செய்யும். இதன் பேட்டரி 6 முதல் 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. ஆனால் சக்தி அதிகமான பேட்டரிகள் 10.5 மணி நேர இயங்கு நேரத்தை அளிக்கும்.

இந்த ரெட்ரோ டூவோ போர்ட்டபுளின் விலை ரூ.5,000மாக இருக்கும். இந்த ரெட்ரோஜென் அடாப்டர் மற்றும் ரெட்ரோபோர்ட் அடாப்டர் வரும் பிப்ரவரியில் சந்தைக்கு வர இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X