இன்னிசை பாடி வரும் ரிவாம்ப் ஹெட்போன்!

புதிய ரிவாம்ப் ட்ரூ ப்ளட் வரிசை ஹெட்போன்களை வி-மோடா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. எச்பிஒ நிறுவனத்தின் ஒப்பந்த்ததோடு இந்த வி-மோடா ரிவேம்ப் ட்ரூ பிளட் ஹெட்போன்கள் வருகின்றன.
வி-மோடா இந்த ட்ரூ ப்ளட் ஹெட்போன்களை கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் தயாரித்து வழங்குகின்றன. இதில் உள்ள ஒரு பட்டன் வெள்ளி நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது புல்லட் மைக்ரோபோன் இசையை ப்ளே செய்வதற்கும் அழைப்புகளை எடுப்பதற்கு உதவி செய்கிறது.
இதில், 4 ஜோடி சிலிகான் இயர்பட்ஸ்க்களும் துணையாக வருகின்றன. அதுபோல் இது கீழே விழாமல் இருப்பதற்காக ஆக்டிவ் ப்ளக்ஸ் இயர்-ஹூக்ஸ் கொண்டு வருகிறது.
இந்த ஹெட்போனில் உள்ள வி-மாஸ்க் 9மிமீ நியோடியம் டிரைவர் மிகத் தரமான துல்லியமான பேஸ் மற்றும் இதர இசை அளவுகளை மிக அழகாக வழங்குகிறது. மேலும் இந்த ரிவாம்ப் ஹெட்போனை பீட்போர்ட் ஏர் ஃப்ளோ சிஸ்டத்தோடு இணைத்தால் இதன் இசை மிகவும் அபாரமாக இருக்கும்.
இந்த ஹெட்போன் இயர் ஹூக்குகளுடன் 4 பிளிஸ் 2.0 இயர் பட்ஸ் ஜோடிகளை வழங்குகிறது. இது பலவிதமான அளவுகளில் வருவதால் நமக்கு விருப்பமானதைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த ஹெட்போன் மிகவும் அழகாக டிஸைன் செய்யப்பட்டுள்ளது.
இசைப் பிரியர்களின் சரியானத் தேர்வாக இந்த ஹெட்போன் இருக்கும். இந்த ரிவாம்ப் ஹெட்போன் அமெரிக்காவில் இந்திய மதிப்பில் ரூ.5,000க்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications