அதிரடியால் ஜியோவுக்கு அக்.1.5 கோடி வாடிக்கையாளர்கள்.! தவித்த ஏர்டெல்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்த சலுகையால், கடந்த அக்டோபர் மாத்ததில் மட்டும் 1.5 கோடி புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். பாரதி ஏர்டெல், டோகோ, ஐடியா, வோடபோன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தவித்து
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்த சலுகையால், கடந்த அக்டோபர் மாத்ததில் மட்டும் 1.5 கோடி புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

பாரதி ஏர்டெல், டோகோ, ஐடியா, வோடபோன் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தவித்து உள்ளனர். இதனால் வாடிக்கையாளர்களை இழந்தது தான் மிச்சம்.
இதை டிராய் அறிவித்துள்ளது. மேலும் அம்பானிக்கு குரு உச்சத்தில் நிற்கின்றார்.

ஜியோ நிறுவனம்
ஜியோ நிறுவனம் அறிவித்த குறைந்த காலங்களிலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்றது. மேலும் இந்தியாவில் முதன் முதலில் 4 ஜியில் சேவையை துவங்கி அசத்தியது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்களையும் பெற்றது.

அதிரவிட்ட சலுகைகள்:
ஜியோ நிறுவனம் ஆரம்ப சலுகையால முதலில் ஒரு வருடம் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள், 100 எம்எம்எஸ், கால் டியூன், மிஸ்டுகால் சலுகை, 1ஜிபி இலவச டேட்டா, ரோமிங் உள்ளிட்டவைகளை முற்றிலுமாக இலசமாக வழங்கியது. இதனால் அதிக வாடிக்கையாளர்களை குறைந்த காலத்தில் பெற்றது.

2ஜிபி டேட்டா:
கட்டணத்தில் மாற்றம் செய்து, ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, 100 எம்எஸ்எஸ் இலவசம், காலர்டியூன், மிஸ்டுகால் அலர்ட், ரோமிங் ப்ரீ உள்ளிட்ட சலுகைகளையும் வழங்கி வருகின்றது.

சர்வதேச வோல்ட் இ ரோமிங் சேவை:
சர்வதேச வோல்ட்இ ரோமிங் என்ற அதிவேக இணைய சேவையும் அறிமுகம் செய்து, தனது இணைய சேவை வேகத்தையும் அதிகரித்து காட்டியது ஜியோ, மேலும், தொழில் நுட்ப ரீதியாகவும் மற்ற நிறுவனங்களை பந்தாண்டியது.

கால் டிராப் ஆகவில்லை:
ரயில் மற்றும் சாலை போக்குவரத்தின் போது, ஜியோ நிறுவனம் மட்டும் கால் டிராப் பிரச்னையில் சிக்கவில்லை. பிஎஸ்என்எல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் கால் டிராப் பிரச்னையில் சிக்கின.

1.5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றது:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.05 கோடி வாடிக்கயைாளர்கள் இணைந்துள்ளதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் பதிய வாடிக்கையாளர்கள்:
இதைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. அவ்வாறு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் கூட்டாக 2018 அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 1.08 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன.

கூடுதலாக வாடிக்கையாளர்கள் பெறவில்லை:
அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். தவிர மற்ற டெலிகாம் நிறுவனங்கள் எதுவும் கூடுதலாக வாடிக்கையாளர்களை சேர்க்கவில்லை.

வாடிக்கையாளர்களை இழந்தன:
அக்டோபர் 2018 இல் மட்டும் வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்.டி.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

வாடிக்கையாளர்கள் இழப்பு:
இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 73.61 லட்சம், ஏர்டெல் நிறுவனம் 18.64 லட்சம், டாடா டெலிசர்வீசஸ் 9.25 லட்சம், எம்.டி.என்.எல். நிறுவனம் 8,068 மற்றும் ஆர்.காம் நிறுவனம் 3,831 வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

கோடி வளர்ச்சி:
செப்டம்பர் முதல் அக்டோபர் மாத இறுதி வரை இந்திய டெலிபோன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119.14 கோடியில் இருந்து 119.20 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு மாதத்தில் 0.05 சதவிகிதம் வளர்ச்சியாகும்.


Click it and Unblock the Notifications








