Home
Music

30 மணிநேர பேட்டரி பேக்கப்புடன் புதிய எம்பி3 ப்ளேயர்

By Super
30 மணிநேர பேட்டரி பேக்கப்புடன் புதிய எம்பி3 ப்ளேயர்
ஆர்சிஎ ஒரு புதிய ப்ளாஷ் எம்பி3 ப்ளேயரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ப்ளேயரை நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இது வயர்லஸ் வசதி கொண்டிருப்பதால் கணினியிலிருந்து நேரடியாக பாடல்களை பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த எம்பி3 ப்ளேயர் 0.72 இன்ச் உயரமும், 3.10 இன்ச் அகலமும் 1.46 இன்ச் அடர்த்தியும் 24 கிராம் எடையும் கொண்டுள்ளது. இது சிவப்பு நிறத்தில் வருகிறது. மேலும் இது எஎசி, எம்பி3 மற்றும் டபுள்யுஎம்எ போன்ற ஆடியோ பைல்களை சப்போர்ட் செய்யும்.

குறிப்பாக ஒரே நேரத்தில் இதில் 600 பாடல்களை சேகரித்து வைக்க முடியும். மேலும் இது 2ஜிபி மெமரி சேமிப்பையும் கொண்டுள்ளது. இதன் ஹெட்போனும் சிறந்த ஆடியோவை நமக்குத் தரும். இந்த எம்பி3 ப்ளேயரின் பேட்டரி திறன் அலாதியானது. அதாவது இது குறைந்த மின் திறனை எடுத்து 30 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் சக்தி கொண்டது.

இந்த ஆர்சிஎ ப்ளாஷ் எம்பி3 ப்ளேயர் ஒரு வருட உத்திரவாதத்துடன் ஆர்சிஎ ஈசி ஆர்ஐபியுடன் வருகிறது. இந்த ஈசி ஆர்ஐபி எல்லாவிதமான ஆடியோ பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது. மேலும் இது இன்டர்னட் எக்ஸ்ப்ளோரர் 6.0 அல்லது அதற்கும் மேல், விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 அல்லது எக்ஸ்பி உடன் எஸ்பி 1 அல்லது அதற்கும் மேல் அல்லது விண்டோஸ் மீடியா ப்ளேயர் 10 அல்லது அதற்கும் மேல் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

இத்தனை சிறப்பு அம்சங்களுடன் இந்த எம்பி3 ப்ளையேர் மிக ஸ்டைலாக இருக்கிறது. இதின் தரமான இசையைக் கேட்க முடியும் என்று அதன் நிறுவனம் சான்று வழங்குகிறது. இந்த எம்பி3 ப்ளேயர் ரூ.1474 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X