துள்ளல் நடனத்துடன் அள்ளும் இசை வழங்கும் ஸ்பீக்கர்!

Posted By: Karthikeyan
துள்ளல் நடனத்துடன் அள்ளும் இசை வழங்கும் ஸ்பீக்கர்!

மின்னனு சந்தையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான ஸ்பீக்கர்கள் புதிது புதிதாக பல வடிவங்களில் பல அளவுகளில் வருகின்றன. அவற்றில் ஒரு சில பட்டையைக் கிளப்புகின்றன. மேலும் அவற்றின் டிசைனும் சூப்பராக இருக்கின்றன. அதாவது சூப்பரான ஸ்டைலுடன் அதே நேரத்தில் அதிரடி இசையை வழங்கக்கூடிய ஸ்பீக்கர்களைத் தேர்ந்தெடுப்பது சற்று சிரமமான காரியம் ஆகும்.

இப்போது ஃபயர்பாக்ஸ் நிறுவனம் தற்போது ஒரு புதிய தனித்துவம் நிறைந்த ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்பீக்கர் ஆகும். முதல் பார்வையிலேயே இந்த ஸ்பீக்கர் அனைவரின் இதயங்களையும் கவர்ந்துவிடும். ஏனெனில் இந்த ஸ்பீக்கர் ஒரு பூனை பொம்மை வடிவத்தில் இருக்கிறது.

இந்த பூனை ஸ்பீக்கரின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதை மியூசிக் டிவைசில் இணைத்தவுடன் அது நடனம் ஆட ஆரம்பித்துவிடும். இந்த நடனம் ஆடும் ஸ்பீக்கர் 3.5 மிமீ ஸ்டேன்டர்டு ஆடியோ ஜாக் கொண்டுள்ளதால் இந்த ஸ்பீக்கரை மொபைல்கள், டேப்லெட்டுகள், கணினிகள், ஐபோடுகள் மற்றும் எம்பி3 ப்ளேயர் மேலும் 3.5 ஜாக் கொண்ட எந்த மியூசிக் டிவைசோடும் இணைக்க முடியும்.

இந்த பூனை ஸ்பீக்கர் ஆடுவது மிக அருமையாக இருக்கும். ஆனால் நமது பாடலுக்கேற்ப ஆடாது. ஆனாலும் அது ஆடும்போது கண்டிப்பாக அனைவரது மனதையும் கவர்ந்திழுக்கும்.

இந்த நடனம் ஆடும் பூனை ஸ்பீக்கரை மியூசிக் டிவைசோடு இணைத்துவிட்டால் அது செயல்பட ஆரம்பித்துவிடும். மேலும் இந்த ஸ்பீக்கர் தரமான இசையை வழங்குகிறது. அதே நேரத்தில் இந்த ஸ்பீக்கரின் ஆட்டத்தை நிறுத்தி சாதாரண ஸ்பீக்கரில் பாடல் கேட்பது போலவும் இந்த ஸ்பீக்கரில் பாடல்களைக் கேட்கலாம்.

இந்த பூனை ஸ்பீக்கரை இயக்க 3ஏஏ பேட்டரிகள் அல்லது 4.5 வோல்ட் அடாப்டர் தேவைப்படும். ஆனால் அடாப்டர் அல்லது பேட்டரிகளுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும். இந்த ஃபயர்பாக்ஸ் நடனமாடும் பூனை ஸ்பீக்கர்கள் ரூ.3,000க்கு கிடைக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot