இன்டர்நெட் வசதியுடன் புதிய மீடியா ப்ளேயர்!

Posted By: Karthikeyan
இன்டர்நெட் வசதியுடன் புதிய மீடியா ப்ளேயர்!
போர்ட்ரோனிக்ஸ் ஒரு புதிய மீடியா ப்ளேயரை அறிமுகம் செய்திருக்கிறது. இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு சூப்பரான மீடியா ப்ளேயர் ஆகும். மேலும் இந்த ப்ளேயர் எச்டி கண்டன்டுகளை இயக்க வல்லது.

இந்த மீடியா ப்ளேயர் எர்த்நெட் மற்றும் வைபை வசதி கொண்டுள்ளதால் நெட் வொர்க்கோடு மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இந்த இசைப் பேழை 1080பி முழு எச்டி வீடியோக்கள், இசை மற்றும் போட்டோக்கள் போன்றவற்றை மிக அருமையாக இயக்கும் தன்மை கொண்டது.

அதோடு இந்த இசைப் பேழை பவர் பாயிண்ட், எக்ஸல், வேர்ட் டாக்குமென்ட்ஸ் போன்றவற்றையும் இயக்கக்கூடியது.

இந்த இசைப் பேழை இன்டர்நெட்டை இயக்கும் வசதி கொண்டிருப்பதால் வயர்லஸ் கீபோர்டு மூலம் இந்த இசைப் பேழையில் யுடியூப் வீடியோக்களை கண்டு ரசிக்க முடியும். மேலும் இந்த சாதனம் யுஎஸ்பி வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இது யுஎஸ்பி வெப்காம் மற்றும் வீடியோ உரையாடல் போன்றவற்றையும் சப்போர்ட் செய்யும்.

ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் மற்றும் கேம்களை இந்த இசைப் பேழையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதில் எச்டிஎம்ஐ போர்ட் உள்ளதால் இதை எச்டிடிவியுடன் இணைத்துக் கொள்ளலாம்.

இந்த லைம் பாக்சின் விலை ரூ.8500 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்