எந்த இடத்திலும் அதிரும் பாக்கெட் பூம் போர்ட்டபுள் ஸ்பீக்கர்

பாக்கெட் பூம் அதிர்வு ஸ்பீக்கர்கள் ஏராளமான ஏதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றன. அவற்றில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் அவற்றின் நிறைகள் அவற்றை சரி செய்துவிடும். குறிப்பாக இந்த ஸ்பீக்கர்களை கதவு, தெர்மாகூல் பெட்டி, கண்ணாடி பெட்டி போன்ற எந்த இடத்தில் வைத்தாலும் இவை அவற்றை ஸ்பீக்கர்களாக மாற்றிவிடும். இவை சாதாரண ஸ்பிக்கர்கள் போன்று செயல் பட்டாலும் இவை தரும் அதிர்வுகள் மனங்களில் ஒருவித புதிய கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இந்த பாக்கெட் பூம் அதிர்வு ஸ்பீக்கர்களைப் பார்த்தவுடன் நமக்கு அவற்றை வாங்கத் தோன்றும். அந்த அளவிற்கு அது படு ஸ்டைலாக இருக்கிறது. இவை 2 எஎஎ பேட்டரிகள் கொண்டிருந்தாலும் இவற்றை யுஎஸ்பி கேபிள் மூலம் ஜார்ஜ் செய்ய முடியும். இவை பல நிறங்களில் வருகின்றன. இவை 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கை கொண்டிருக்கின்றன. இவற்றிலுள்ள ஸ்டிக்கி பேட் மூலம் இவற்றை எந்த இடத்திலும் ஒட்டி வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக இவை சிறியவையாக இருப்பதால் இவற்றை நமது பாக்கட்டில்கூட ஒட்டிவைத்துக் கொள்ளலாம்.
பாக்கட் பூமின் சவுண்ட் அவுட்புட் மிகத் தரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். வெற்றிடத்தில் இதன் ஒலி மிக சிறப்பாக இருக்கும். ஆனால் இதன் ஸ்டிக்கிபேட் சிறிது நேரம்தான் வீரியத்துடன் இருக்கும். பின் தளர்ந்துவிடும். அதனால் இதை எளிதில் வேறு இடத்திற்கு மாற்ற முடியும். இவற்றை குழந்தைகள்கூட விரும்புவர்.
இந்த பாக்கட் அதிர்வு ஸ்பீக்கர்கள் இந்தியாவிற்கு வெகு சீக்கிரம் வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ.23,00 ஆக இருக்கலாம் எனறு நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications