அதிக துல்லியத்தினை வழங்கும் புதிய புளூடூத் ஹெட்செட்!

Posted By: Staff
அதிக துல்லியத்தினை வழங்கும் புதிய புளூடூத் ஹெட்செட்!

புதிய புளூடூத் ஹெட்செட்டை உருவாக்கி உள்ளது பிலான்ட்ரோனிக்ஸ் நிறுவனம். புளூடூத் ஹெட்செட் மார்கெட்டில் மிக பிரபலமான நிறுவனமான பிலான்ட்ரோனிக்ஸ், வாயேஜர் எச்டி என்ற புதிய புளூடுத் ஹெட்செட்டை வழங்குகிறது.

எங்கு பார்த்தாலும் புளூடூத் ஹெட்செட் மூலம் மக்கள் பேசி கொண்டே இருப்பதை இன்று பார்க்க முடிகிறது. இதனால் ஏகப்பட்ட நிறுவனங்கள் புளூடூத் ஹெட்செட்களை தயாரிக்கிறது. இதில் நவீன முறை கொண்ட சாதனத்தை தேர்வு செய்வது மிக கடினமான ஒன்று தான்.

2009-ஆம் ஆண்டு இதே பிலான்ட்ரோனிக்ஸ் நிறுவனம், வாயேஜர் ப்ரோ என்ற புளூடூத் ஹெட்செட்டை வழங்கியது. ஆனால் இது பார்க்க கொஞ்சம் பெரியதாக இருக்கிறது என்று பல விதமான கருத்துகள் வெளியானது. அதன் பிறகு பிலான்ட்ரோனிக்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட வகையில் வாயேஜர் ப்ரோ ப்ளஸ், வாயேஜர் ப்ரோ யூசி போன்ற புளூடூத் ஹெட்செட்களை வெளியிட்டது.

இதை தொடர்ந்து வாயேஜர் ப்ரோ எச்டி என்ற புதிய புளூடூத் ஹெட்செட்டை வெளியிட்டுள்ளது பிலான்ட்ரோனிக்ஸ் நிறுவனம். இந்த புளூடூத் ஹெட்செட் ரப்பரும் மற்றும் பிலாஸ்டிக்கும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வால்யூமை அதிகம் வைத்து கொள்ள பிரத்தியேக பட்டனும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

17 கிராம் இலகு எடை கொண்ட புளூடூத் ஹெட்செட் சிறந்த துல்லியத்தை வழங்கும். இதன் மூலம் குரல்களை துல்லியமாக கேட்க முடியும். பிலான்ட்ரானிக்ஸ் ப்ரோ எச்டி புளூடூத் ஹெட்செட்டின் விலை ரூ.4,999 இருக்கும். இந்த எலக்ட்ரானிக் சாதனம் ஆன்லைனில் கொஞ்சம் குறைந்த விலை கொண்டதாக இருக்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot