ஸ்டீஸ் வரிசையில் பயனீர் களிமிறக்கிய புதிய ஆடியோ சிஸ்டங்கள்

குறிப்பாக இந்த ஹெட்செட்டுகள் நடனப் பயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும். இதன் 3 மாடல்கள் சோலோ, டூவோ மற்றும் க்ரூவ் என்று பெயரிடப்பட்டு இருக்கின்றன. இந்த 3 மாடல்களும் தனித்துவம் கொண்ட தொழில் நுட்பங்களுடன் வருகின்றன.
இந்த பயனீர் ஸ்டீஸ் இசைப் பேழை இன்பில்ட் ஆட்டோ பேட்டில் மோடுடன் வருகிறது. அதனால் இதைப் பயன்படுத்துவோர் இதன் கவுண்டவுன் டைமருடன் பேட்டில் ஸீக்வன்ஸ் உருவாக்க முடியும்.
இந்த பயனீர் ஸ்டீஸில் கட்டிங் எட்ஜ் வசதியும் உள்ளது. அதுபோல் இதில் உள்ள டெம்போ கட்டுப்பாட்டு தொழில் நுட்பம் இசையின் பிட்ச் மாறாமல் அதன் டெம்போவை மாற்ற உதவுகிறது. மேலும் நடனப் பயிற்சி செய்பவர்கள் பாடலின் வேகத்தை அதன் அம்சம் மாறாமல் அதன் வேகத்தைக் குறைக்க முடியும். மேலும் இந்த சிஸ்டம் 8பீட் ஸ்கிப் தொழில் நுட்பத்தை வழங்குகிறது. இந்த தொழில் நுட்பம் கோரியோக்ராபி செய்யும் போது 8 கவுண்ட் கொடுக்க உதவுகிறது.
இந்த பயனீர் ஸ்டீஸ் இசைப் பேழை நடன க்யூ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் மிக எளிதாக நாம் நினைத்த இடத்திலிருந்து பாட்டை தொடங்க முடியும். இதன் 3 மாடல்களும் டிஜே மோடுடன் வருகின்றன. இந்த மோட் இதிலிருக்கும் மிக்ஸ்ட்ராக்ஸ் சாப்ட்வேரை இசை லைப்ரரியிலிருந்து ஆட்டோமேட்டிக்காக செயல்பட வைக்கிறது. மேலும் இந்த தொழில் நுட்பம் நடனத்தின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மிக்ஸ் செய்வதற்கு உதவுகிறது.
இந்த பயனீர் ஸ்டீஸ் இசை சிஸ்டம் பேஸ் ட்ரம் மற்றும் ஹைஹாட் போன்ற கருவிகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நடனமாடுபவர்கள் பயிற்சியின் போது அந்த பீட்களில் கவனம் செலுத்த உதவுகிறது. மேலும் இந்த இசைப் பேழை வயர்லஸ் அல்ட்ரா தின் க்ரடிட் கார்ட் கொண்டு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது. அதன் மூலம் இதைத் தூரத்திலிருந்தே இயக்க முடியும்.
இந்த பயனீர் ஸ்டீஸ் சோலோவின் விலை ரூ.13,000 ஆகும். அதுபோல் ஸ்டீஸ் டூவோவின் விலை ரூ.15000 ஆகும். இறுதியாக ஸ்டீஸ் க்ரூவின் விலை ரூ.21,000 ஆகும். இந்த நவம்பர் மாதம் இந்த இசைப் பேழைகள் விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications