பார்ட்டிகளை அமர்க்களப்படுத்த வந்த பயனீர் ஆடியோ மிக்ஸர்

இந்த காரணங்களால் பயனீர் ஆடியோ உலகில் இன்னும் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்நிறுவனம் புதிய மலிவு விலை ஆடியோ மிக்சிங் சாதனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறைந்த விலையில் அபாரமாக செயல்பாடுகள் கொண்டதாக இந்த சாதனத்தை பயனீர் அறிமுகம் செய்துள்ளது.
பயனீர் டிஜேஎம் 250 மிக்ஸர் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய ஆடியோ மிக்சிங் சாதனம் அனைத்து வகையான் தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும். இது சிறந்த இன்டிபென்டனட் சானல் பில்டர் மற்றும் க்ராஸ் பேடர் ஆகிய வசதிகளை வழங்குகிறது. அதனால் இதைப் பயன்படுத்துவோருக்கு இது பலவிதமான க்ளப் மிக்சஸ் மற்றும் வினில் ஸ்க்ராட்சிங்கை வழங்கும்.
பயனீர் டிஜேஎம் 250 மிக்ஸர் இரட்டை சவுண்ட் கலர் பில்டர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் இதன் ஒலி அளவை நினைத்த நேரத்தில் எந்தவித தடையுமில்லாமல் அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். மேலும் இதிலிருந்து வரும் ஒலி இரைச்சல் இல்லாமல் மிக துல்லியமாக இருக்கும். குறிப்பாக இந்த மிக்ஸரை சிறப்பு நிகழ்வுகளிலும் டான்ஸ் க்ளப்புகளிலும் மற்றும் சிறிய பப்புகளிலும் பயன் படுத்தலாம்.
பயனீர் டிஜேஎம் 250 மிக்ஸர் மிக அடக்கமான அளவில் உள்ளதால் இதை சூட்கேஸில் வைத்து எடுத்துச் செல்லலாம். இந்த மிக்ஸரின் பின்புறம் எக்ஸ்எல்ஆர் அவுட்டுகள் உள்ளன. அதனால் இவற்றை எந்த ஒரு ஆடியோ சிஸ்டத்தோடும் இணைக்க முடியும். மேலும் ஐபோடுகளைக் கூட இதில் இணைக்க முடியும். இந்த மிக்ஸரில் 24 பிட் டிஜிட்டல் ஒலி ப்ராசஸிங் உள்ளதால் இதன் இசை நம்மை வேற்று உலகத்திற்கு அழைத்துச் செல்லும். பயனீர் டிஜேஎம் 250 மிக்ஸரின் விலை ரூ.20,000 ஆகும்.


Click it and Unblock the Notifications