Home
Music

ஐபோன்களுக்கான புதிய ஆடியோ சிஸ்டம்: பயனீர் அறிமுகம்

By Super
ஐபோன்களுக்கான புதிய ஆடியோ சிஸ்டம்: பயனீர் அறிமுகம்
ஆடியோ கருவிகள் மற்றும் இசைப் பேழைகள் தயாரிப்பில் பயனீ்ர் நிறுவனம் வெற்றி நடை போட்டு வருகிறது. தற்போது அந்நிறுவனம் பயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ் என்ற ஒரு புதிய இசைப் பேழையை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த இசைப் பேழை பார்ப்பவரின் மனங்களையும் எண்ணங்களையுகம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிக நேர்த்தியாக அழகாக இருக்கிறது. இந்த இசைப் பேழை கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்துடன் வருவதால் கண்டிப்பாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விடும். மேலும் இது பல சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

பயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ் ஏர்-ப்ளே தொழில் நுட்பத்துடன் வருவதால் வயர் இல்லாமல் இதை ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளுடன் மிக எளிதாக இணைக்க முடியும். மேலும் இந்த தொழில் நுட்பம் உள்ளதால் மற்ற டிவைஸ்களோடு இந்த இசைப் பேழையை இணைப்பதற்கு நாம் சிரமப்படத் தேவையில்லை.

இது ஏர்ப்ளே அப்ளிகேசன் கொண்டுவருவதால் இது ஏர்ப்ளே அப்ளிகேசன்களான பன்டோரா மற்றும் ஹார்ட் ரேடியோ போன்றவற்றை மிக எளிதாக சப்போர்ட் செய்யும். மேலும் இந்த ஏர்ப்ளே தரமான ஒலி அமைப்போடும் அதே நேரத்தில் மல்டி ரூம் ஆடியோ தொழில் நுட்பத்தோடும் வருகிறது.

பயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ்ஸில் உள்ள மற்ற சிறப்புகளைப் பார்த்தால் அது 2-சானல் டிஜிட்டல் ஆம்பிளிபயரைக் கொண்டுள்ளது. மேலும் இது இன்பில்ட் வைபை இணைப்பையும் பெற்றுள்ளது. இதில் பயனீர் ஜாம் அப் உள்ளதால் இது ப்ளூடூத் இணைப்பு மூலம் மியூசிக்கை பரிமாற்றம் செய்யவும் அதே நேரத்தில் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபோடு மற்றும் ஐபேடுகளிஸ் ப்ளே லிஸ்டுகளை உருவாக்கவும் இயலும்.

மேலும் இது எல்இடி தொழில் நுட்பம் கொண்ட 2.5 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. எப்எம் டியூனரும் இந்த இசைப் பேழைக்கு கூடுதல் பெருமையை சேர்க்கிறது. ரிமோட் கண்ட்ரோல் உள்ளதால் இதை இயக்குவதும் மிக அருமையாக இருக்கும்.

பயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ்ஸில் உள்ள இணைப்பு வசதிகளைப் பார்த்தால் அது எர்த்நெட் போர்ட் மற்றும் ஹெட்போன் போர்ட் கொண்டுள்ளது. இதிலுள்ள யுஎஸ்பி போர்ட் மூலம் கம்போஸிட் வீடியோவை மிக விரைவாக இணைக்க முடியும்.

மேலும் இதிலுள்ள ஆக்ஸ் மற்றும் எப்எம் ஆன்டனா தரமான எப்எம் இணைப்பையும் வழங்கும். இந்த இசைப் பேழை இன்டக்ரேட்டட் விடியூனர் இன்டர்நெட் ரேடியோவை வழங்குகிறது. இதன் மூலம் உலகிலுள்ள ஆயிரக்கணக்கான ரேடியோ ஸ்டேசன்களின் நிகழ்ச்சிகளையும் இதில் கேட்கலாம்.

பயனீர் மியூசிக் டேப் எக்ஸ்- எஸ்எம்சி3-எஸ்ஸின் பொதுவான மாடல் ரூ.20,000க்கும் இதன் எலைட் மாடல் ரூ.24,000க்கும் வரும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X