புதிதாக இரண்டு ஆடியோ சிஸ்டம்களை அறிமுகப்படுத்தியது பயனீர்

By Super
|
புதிதாக இரண்டு ஆடியோ சிஸ்டம்களை அறிமுகப்படுத்தியது பயனீர்
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற பயனீர் நிறுவனம் புதிதாக இரண்டு வயர்லெஸ் ஹோம் தியேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

எப்பொழுதும் இசை கேட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே நுட்பமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த ஸ்பீக்கர்கள்.

எக்ஸ்-எஸ்எம்சி3-கே மற்றும் எக்ஸ்-எஸ்எம்சி5-கே ஆகிய பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹோம் தியேட்டர்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இப்பொழுது அனைத்து வாடிக்கையாளர்களிடமும் ஐஹோம் ஐடபிள்யூ-1 ஆடியோ தொழில்நுட்பம் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. ஆனால், அந்த வாடிக்கையாளர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கத் துடிக்கிறது பயனீர்.

அந்தத் துடிப்பை நிச்சயம் பயனீர் நிறுவனம் சாதித்துவிடும் என்பது தெரிகிறது. ஏனெனில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில் நுட்பமே இதற்கு காரணம்.

இந்த புதிய ஸ்பீக்கரில் வயர்லெஸ் ஏர்ப்பளே மல்டி-ரூம் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன

ஆனால், இப்பொழுது வந்துள்ள புதிய ஸ்பீக்கர்ஸ் மிகவும் அற்புதமாக உள்ளது. இதில் வைபை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைபை தொழில் நுட்பம் டிஎல்என்ஏ மற்றும் ஆப்பில் ஏர்ப்ளே ஸ்ட்ரீமிங் வசதிக்கும் சப்போர்ட் செய்கிறது.

இதில் வீ டியூனர் இன்டர்நெட் ரேடியோ,புளூடூத்(அடிஷனல் அடேப்ட்டர) வசதி கொண்டுள்ளது.

இந்த சிஸ்டம் ஐபோட்/ஐபோன் டோக்கிங் ஸ்டேஷன்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-எஸ்எம்சி5-கே டாப் மாடலில் டிவிடி ப்ளேயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஹெச்டிஎம்ஐ வசதி உள்ளதால் ஹெடெபினிஷன் டிவியுயடன் எளிதாக இணைக்க முடியும்.

டிஜிட்டல் ஆம்ப்ளிஃபையர் இருப்பதனால், துல்லியமான ஆடிபிலிட்டி வசதியை கொடுக்கும். உங்களது பாடல்களை இனிமையாகவும், தெளிவாகவும் கேட்க முடியும்.

2X20 டபிள்யூ ஆர்எம்எஸ் டியூவல் ஃபுல் ரேன்ஜ் பவர் கொண்டது. உங்கள் வசதிக்காக 2.5 இன்ச் ஸ்லீக் எல்சிடி ஃபுல் கலர் டிஸ்ப்ளே கொண்டது.

இதனுடைய முகப்புப் பகுதியில் ட்ராக்ஸ்/மீடியா மற்றிய அனைத்துத் தகவல்களும் இருக்கின்றன. இதில் வாரன்டி 1 வருடத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மற்ற பிரான்டுகளில் 2 வருடம் வாரன்டி கொடுக்கப்படுகிறது.

எக்ஸ்-எஸ்எம்சி3-கே மாடலில் 4 பேசிவ் ரேடியேட்டர்ஸ் உள்ளது. எக்ஸ்-எஸ்எம்சி5-கே 2 பேசிவ் ரேடியேட்டர்ஸ்கள்தான் உள்ளது. இந்த இரண்டு மாடல்களுமே 520.4 x 218.3 x 155.6 மில்லிமீட்டர் டைமென்ஷனை கொண்டுள்ளது.

எக்ஸ்-எஸ்எம்சி5-கே கிலோகிராம் எடை கொண்டது. எக்ஸ்-எஸ்எம்சி3-கே மாடல் 3.6 கிலோகிராம் எடை கொண்டது. எக்ஸ்-எஸ்எம்சி5-கே பிளாக் அலுமினியம் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்-எஸ்எம்சி3-கே 23டபல்யூ பவர் மற்றும் 0.5 ஸ்டான்ட்பை கொண்டது.

எக்ஸ்-எஸ்எம்சி5-கே 220/240வி ஏசி பவர் மற்றும் 50/60ஹெச்சட் ஃபிரீக்குவன்சி வசதி கொண்டுள்ளது.

இதில், எக்ஸ்-எஸ்எம்சி5-கே மாடல் ரூ.22,000 விலையிலும், எக்ஸ்-எஸ்எம்சி3-கே மாடல் ரூ.19,500 விலையிலும் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X