பயனீரின் அட்டகாசமான ப்ளூடூத் எவி ரிசீவர்கள்

Posted By: Karthikeyan
 பயனீரின் அட்டகாசமான ப்ளூடூத் எவி ரிசீவர்கள்

கடந்த காலங்களில் பயனீர் நிறுவனத்தின் தயாரிப்புகள் ப்ளூடூத் மற்றும் 3டி வசதிகளுடன் வந்தன. அந்த வரிசையில் சமீபத்தில் பயனீர் ப்ளூடூத் மற்றும் 3டி வசதிகளுடன் கூடிய எவி ரிசிவர்களை அறிமுகம் செய்கிறது. இந்த பயனீர் எவி ரிசிவர்கள் பயனீரின் விஎஸ்எக்ஸ் வரிசையில் வருகின்றன. மேலும் இந்த எவி ரிசிவர்கள் பல அதன் செயல் திறனுக்கு ஏற்ப பல மாடல்களில் வருகின்றன.

அவற்றின் முறையே 5.1 சேனல் 3டி ரெடி எவி ரிசிவருடன் வரும் விஎஸ்எக்ஸ்-822-கே மற்றும் விஎஸ்எக்ஸ்-522-கே. மற்றும் 7.1 சேனல் 3டி ரெடி எவி ரிசிவருடன் கூடிய விஎஸ்எக்ஸ்-1122-கே மற்றும் விஎஸ்எக்ஸ்-1022-கே ஆகியவையாகும்.

சாதாரண எவி ரிசிவர்களான விஎஸ்எக்ஸ்-522 மற்றும் விஎஸ்எக்ஸ்-822 மிகச் சிறந்த 5.1 சரவுண்ட் ஆடியோவுடன் வருகின்றன. ஆனால் விஎஸ்எக்ஸ்-522ல் ப்ளூடூத் மற்றும் ஏர்ப்ளே வசதிகள் இல்லை.

இந்த எவி ரிசிவர்கள் பல சிறப்பான தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளன. அதாவது இது ஏர்ப்ளே, பன்டோரா, சிரியுஸ் எக்ஸ்எம்டிஎண் மற்றும் விடியூனர் போன்ற நெட்வொர்க் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த ரிசிவர்களை மிக எளிதாக ஐபோடு, ஐபேட் மற்றும் ஏபோன்களில் பொருத்த முடியும்.

மேலும் இந்த எவி ரிசிவர்கள் பயனீர் ஐகண்ட்ரோல் எவி2012, சோன் 2 ஆடியோ அவுட்புட் அல்டிமேட் சவுண்ட் கட்டுப்பாடு, நவீன க்யுடியோ வீடியோ ப்ராசஸிங், நவீன எச்டிஎம்ஐ, எவி நாவிக்கேட்டர், முழு வண்ண ஆன் ஸ்க்ரீன் க்ராபிக்கல் யுஐ, பயனீர் கண்ட்ரோல்அப் மற்றும் இன்டர்நெட் ரேடியோ மற்றும் உயர்தர ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் போன்றவற்றை கொண்டுள்ளன.

இவற்றில் உள்ள நவீன எச்டிஎம்ஐ தொழில் நுட்பத்தில் மூலம் அட்டகாசமான 3டி அனுபவத்தைப் பெறமுடியும். மேலும் இதில் இனிமையான பாடல்கள் மற்றும் படங்களைப் பார்க்க மற்றும் கேட்க முடியும்.

இந்த பயனீரின் சாதாரண எவி ரிசிவர்கள் 12500க்கும் உயர்தர ரிசிவர்கள் ரூ.30000க்கும் கிடைக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot