பீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பத்தில் வரும் அட்டகாசமான வயர்லஸ் ஸ்பீக்கர்

Posted By: Karthikeyan
பீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பத்தில் வரும் அட்டகாசமான வயர்லஸ் ஸ்பீக்கர்

பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் சமீபத்தில் ஒரு புதிய கையடக்க வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருக்கிறது. பீட்ஸ் பில் என்று அழைக்கப்படும் இந்த வயர்லஸ் ஸ்பீக்கர் பீட்ஸ் ஆடியோ தொழில் நுட்பத்தில் வருகிறது.

இந்த புதிய பீட்ஸ் பில் ஸ்பீக்கரில் இசை தரமாக இருக்கும். அதே நேரத்தில் இதில் அதிக சத்தம் இருந்தாலும் இரைச்சல் இருக்காது. மேலும் இந்த புதிய ஸ்பீக்கரில் முதல் முறையாக பீட்ஸ் ஆடியோ அல்காரிதம் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இது அற்புதமான இசையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பீட்ஸ் பில் ஸ்பீக்கரை எல்லாவிதமான ஸ்மார்ட்போனிலும் மிக எளிதாக இணைத்துக் கொள்ளலாம். மேலும் இதில் 4 ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளதால் இது வழங்கும் இசை மிக அற்புதமாக இருக்கும். மேலும் இந்த ஸ்பீக்கரை ஒருமுறை ரிசார்ஜ் செய்தால் அது 7 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும்.

இந்த ஸ்பீக்கரை எசி அடாப்டர் மற்றும் யுஎஸ்பி மூலம் ரிசார்ஜ் செய்யலாம். மேலும் இந்த ஸ்பீக்கரில் மிக சூப்பரான முறையில் கலந்துரையாடலையும் நடத்தலாம். மேலும் இதில் அதிர்வு அதிகமாக இருக்காது. இந்த ஸ்பீக்கரில் 8 ப்ளூடூத் ப்ரொபைல்கள் உள்ளன.

இந்த புதிய ஸ்பீக்கர் கருப்பு, வெள்ளை, மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் வருகிறது. மேலும் பீட்ஸ் ஆடியோ ஸ்டோரில் இந்த ஸ்பீக்கரை 199 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கலாம். மேலும் இந்த ஸ்பீக்கர் எப்போது இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என்று தெரியாது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்