தெவிட்டாத இசை வழங்கும் பிலிப்ஸ் ஹெட்போன்!

ஹெட்போன்கள் அன்றாட வாழ்வின் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டன. அவை அளவில்லாத பொழுதுபோக்கை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக வயர்லஸ் ஹெட்போன்கள் எப்படிப்பட் சூழ்நிலையிலும் நாம் பாடல் கேட்க உதவியாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு தரமான ஹெட்போனை பிலிப்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த புதிய ஹெட்போனின் பெயர் பிலிப்ஸ் எஸ்எச்சி 1300 ஆகும். இந்த ஹெட்போன்களைக் காதுகளின் மேல் அணிந்து கொள்ளலாம்.
இந்த பிலிப்சின் ஹெட்போன் மிகவும் அடக்கமான ஒன்றாகும். இதன் எடை மிகவும் குறைவாக இருப்பதனால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த ஹெட்போனின் ரேஞச் 7 மீட்டராகும்.
இந்த பிலிப்ஸ் ஹெட்போன் ஆர்எப் ட்ரான்ஸ்மிஷன் லிங்க் கொண்டிருப்பதால் இது தடையில்லாத இசையை வழங்குகிறது. மேலும் இது 2 எஎஎ பேட்டரிகளைக் கொண்டுள்ளது. இதன் இயர் கப்புகள் இன்டக்ரேட்டட் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் இது வழங்கும் ஒலி அமைப்பு மிக அபாரமாக இருக்கும்.
இதன் இயர்கப்புகள் பெரிதாக அதே நேரத்தில் காதுகளில் மிகச் சரியாகப் பொருந்துகிறது. மேலும் இந்த இயர் கப்புகள் மென்மையாக இருப்பதால் மிக நீண்ட நேரம் இதில் பாடல்களைக் கேட்க முடியும். மேலும் இதை மிக எளிதாக மடித்து எடுத்துச் செல்ல முடியும்.
இந்த பிலிப்ஸ் ஹெட்போனை இயக்குவது மிக எளிதான காரியமாக இருக்கும். இதன் ட்ரான்ஸ்மிட்டரை டிவியின் அவுட்புட்டில் இணைக்க வேண்டும். இது 12 வால்ட் டிசி அடாப்டர் வால் சாக்கெட்டிலிருந்து மின் திறன் அளிக்கப்படுகிறது.
பின் 2 எஎஎ பேட்டரிகளை ஹெட்போனில இணைக்க வேண்டும். இப்போது ஹெட்போன் இயங்க ஆரம்பித்துவிடும். இந்த ஹெட்போனின் ஆடியோ மிக அற்புதமாக இருக்கும். மேலும் இந்த ஹெட்போனின் விலையும் குறைந்த அளவில் இருக்கிறது. அதாவது இதன் விலை ரூ.2,000 ஆகும்.
Engl


Click it and Unblock the Notifications