Home
Music

பிலிப்ஸ் வழங்கும் அட்டகாசமான இசைப் பேழைகள்

By Super
பிலிப்ஸ் வழங்கும் அட்டகாசமான இசைப் பேழைகள்

பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் அட்டகாசமான புதிய பொழுதுபோக்கு சாதனங்களை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. குறிப்பாக ஹோம் தியேட்டர் முதல் கையடக்க மீடியோ பிளேயர்கள் வரை பல சூப்பரான இசைப் பேழைகளை இந்திய சந்தையில் பிலிப்ஸ் இந்த ஆகஸ்ட் முதல் விற்க இருக்கிறது. இந்த பிலிப்சின் புதிய இசைச் சாதனங்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம்.

குறிப்பாக பல புதிய ஹோம் தியேட்டர் சிஸ்டங்களைக் களமிறக்க இருக்கிறது. இந்த ஹோம் தியேட்டர்களில் டிவிடி, விசிடி, சிடி மற்றும் யுஎஸ்பி போன்ற அனைத்துச் சாதனங்களையும் இணைத்துக் கொள்ளலாம். இந்த ஹோம் தியேட்டர்கள் ரூ.9,890க்கு விற்கப்பட இருக்கின்றன.

அடுத்ததாக இரண்டு சூப்பரான ஸ்பீக்கர்களை பிலிப்ஸ் விற்க இருக்கிறது. இந்த ஸ்பீக்கர்கள் எச்டிஎம்ஐ மற்றும் ரிமோட் வசதியுடன் வருகின்றன. இந்த ஸ்பீக்கர்கள் ரூ.12,890 முதல் ரூ.10,890 வரை விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

மேலும் சில அடக்கமான ஸ்பீக்கர்களையும் களமிறக்குகிறது பிலிப்ஸ். இந்த 3டி ஆங்கிள் ஸ்பீக்கர்கள் சினிமாவின் தரத்தை வீட்டிற்கே கொண்டு வந்துவிடும். இந்த ஸ்பீக்கர்கள் ரூ.20,990 முதல் ரூ.23.990 வரை விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அதோடு கோகியர் என்ற பெயரில் எம்பி3 மற்றும் எம்பி4 ப்ளேயர்களையும் களமிறக்க இருக்கிறது. கையடக்கமாக இருக்கும் இந்த இசைப் ப்ளேயர்கள் ரூ.1,599க்கு விற்கப்பட இருக்கிறது.

மேலும் கோகியர் எஸ்4 என்ற எம்பி4 ப்ளேயர் ரூ.5,999க்கு விற்கப்பட இருக்கிறது. அதோடு பிலிப்ஸ், ஐபோன் மற்றும் ஐபோடுக்கான டோக்கிங் ஸ்பீக்கர்களையும் விற்பனை செய்ய இருக்கிறது. இந்த ஸ்பீக்கர்களில் சவுண்ட் ஸ்பியர் தொழில் நுட்பமும் உள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் ரூ.65,990க்கு விற்கப்படுகிறது.

அடுத்ததாக ஒருசில ஆன்ட்ராய்டு டோக்கிங் ஸ்பீக்கர்களையும் பிலிப்ஸ் விற்பனை செய்ய இருக்கிறது. இந்த ஆன்ட்ராய்டு ஸ்பீக்கர்கள் ரூ.3,999லிருந்து ரூ.5,999 வரை விற்கப்பட இருக்கின்றன.

பிலிப்ஸ் நிறுவனம் மேலும் ஒ நெயில் என்ற பெயரில் ஒரு சில ஹெட்போன்களையும் விற்பனை செய்ய இருக்கிறது. இந்த ஹெட்போன்கள் சூப்பரான இசையை வழங்கும் இவை ரூ.3,999லிருந்து ரூ.4,999 வரை விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X