ஆண்ட்ராய்டு மியூசிக் ப்ளேயர் - பிலிப்ஸ் அறிவிப்பு

அந்த வரிசையில் பிலிப்ஸ் நிறுவனம் தமது மியூசிக் ப்ளேயர்களுக்கு ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தைப்
பயன்படுத்தவிருக்கிறது. ரொம்ப காலமாக பிலிப்ஸ் நிறுவனம் இசை உலகத்தில் பயணம் செய்து வாடிக்கையாளர்களிடம் சிறந்த நல்மதிப்பை பெற்றிருக்கிறது.
அதே போல் நவீன தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துவதிலும் முன்னனியில் இருக்கிறது. அந்த விதத்தில் பிலிப்ஸ் புதிதாக கோ கியர் வரிசை தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
கோ கியர் கனக்ட் 3 என்பது ஒரு ஆண்ட்ராய்டு மீடியா ப்ளேயர் ஆகும். இது பெர்லினில் நடந்த ஐஎப்எ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கோகியர் கனக்ட் 3ல் ஆண்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்ப்ரீட் உள்ளது.
இந்த மியூசிக் ப்ளேயரில் வைபையும் உள்ளதால் விரைவாக தகவல் பரிமாற்றம் மற்றும் இண்டர்நெட் ப்ரவுஸ் செய்ய முடியும். மேலும் இந்த புதிய மீயூசிக் ப்ளேயர் மூலம் ஆண்ட்ராய்ட் சந்தையிலிருந்த ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்ய முடியும்.
கோ கியர் கனக்ட் 3ல் 3.2இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை உள்ளது. இதன் மூலம் சிறந்த 720பி அளவு வீடியோவை காண முடியும். இந்த ப்ளேயரில் புதிய தொழில் நுட்பமான புல்சவுண்ட் வசதியை பிலிப்ஸ் வைத்திருப்பதால் திரைப்படங்களான ஒலி மற்றும் சவுண்ட் பெர்சனலைசேஷன் ஆகியவை சிறப்பாக இருக்கும்.
இவர்களின் முந்தைய கோ கியர் வரிசை படைப்புகளும் சிறந்த ஒலி அமைப்புடன் வந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றன. அதைப் போல புதிய கோ கியர் கனக்ட் 3 பிலிப்ஸின் சாங்பேர்ட் பிசி மென்பொருளைக் கொண்டிருக்கிறது.
அதனால் பிசியிலிருந்து பாடல்களை எந்த ஒரு சிரமமும் இல்லாமல் சின்க்ரோனைஸ் செய்ய முடியும். மேலும் இந்த மென்பொருள் மூலம் நம்முடைய மியூசிக் பைல்களில் எளிதாக ப்ளேஸலிஸ்ட்டை உருவாக்க முடியும்.
அதனால் மியூசிக் லைப்ரரியிலிருந்த மியூசிக் பைல்களைத் தேடவேண்டிய அவசியமில்லை.
பிலிப்ஸின் கோ கியர் கனக்ட் 3 சிம்ப்ளி ஷேர் உதவியுடன் டிஎல்என்எ வசதி கொண்டிருப்பதால் மியூசிக் பைல்களை பிலப்ஸின் எல்லா தயாரிப்புகளிலும் மற்றும் டிஎல்என்எவைச் சேர்ந்த நெட்வொர்க மியூசிக் ப்ளேயர்ஸ், வைபை
தொடர்பு உள்ள டிஜிட்டல் கேமரா, போட்டோ ப்ரேம்கள் மற்றும் வயர்லஸ் ஒலிப்பெருக்கிகளில் இயக்க முடியும்.
இந்த கோ கியர் கனக்ட் 3 அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதுபோல் அதன் விலையும் அப்பொழுது அறிவிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications