Home
Music

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கான பிலிப்ஸின் பிடலியோ ஆண்ட்ராய்டு ஆடியோ டோக்

By Super
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கான பிலிப்ஸின் பிடலியோ ஆண்ட்ராய்டு ஆடியோ டோக்
சில நாட்களுக்கு முன்பு ஐஎப்எயில் பிலிப்ஸ் தனது புதிய ஸ்பீக்கர் டாக் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் சிறப்பு என்னவென்றால் இதை மைக்ரோ யுஎஸ்பி வசதிகொண்ட ஸ்மார்ட்போன்களோடு இணைக்க முடியும். இதனால் ஆன்ட்ராய்டு ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஏனெனில் ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் தற்போது எல்லாம் கொண்ட ஒரே ஒரு ஸ்பீக்கர் டாக் சிஸ்டத்தையே நம்பி இருக்கின்றனர். ஆனால் இந்த புதிய பிலிப்ஸின் பிடலியோ ஆண்ட்ராய்டு ஆடியோ டேக் மூலம் ஸ்மார்ட் போனிலும் இதை இணைக்க முடியும்.

ஆண்ட்ராய்டை பயன்படுத்துவோருக்காக 3 டிவைஸ்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆண்ட்ராய்டு எஎஸ்351க்கு பயன்படும் ஸ்பீக்கர் சிறியதாக இருக்கும். ஆனால் அதன் ஒலி அமைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். மேலும் இது ஐபோட் பிடலியோ டோக்கைப் போன்று இருக்கும். கடந்த ஆண்டு இது அறிமுகப்படுத்தப் பட்டது. இதை படுக்கை அறை, அலுவலகம், மற்றும் தனி அறைகளில் பயன்படுத்த முடியும்.

ஆனால் ஐபோட் டோக் வெர்சன்களை பிடலியோவோடு ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு எஎஸ்351 இரண்டு வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது ஆப்பிளின் 30 பின் கனக்டருக்குப் பதிலாக மைக்ரோ யுஎஸ்பி கனக்டர் கொடுக்கப்பட்டது. மேலும் இது ப்ளூடூத் வசதியையும் அளிக்கிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவோர் தமது டிவைஸ்களை தரமாக டோக் செய்ய வேண்டுமென்று பிலிப்ஸ் விரும்புகிறது. அதனால் இந்த டோக்கிங் க்ரேடில் சக்கரங்கள் உள்ளன. அதனால் இதை உயர்த்தவும் முடியும் தாழத்தவும் முடியும்.

பிலிப்ஸின் இந்த ஸ்பீக்கர் டோக் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதன் ப்ளூடூத் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் ஸ்பீக்கருக்கு தகவல் பரிமாற்றம் செய்யலாம். மேலும் சார்ஜ் செய்ய யுஎஸ்பி கனெக்டரும் உள்ளது. மேலும் இதன் ஒலியின் தரத்தை ஸ்பீக்கர் முடிவு செய்கிறது. பிலிப்ஸின் பிடலியோ ஆண்ட்ராய்டு ஆடியோ டோக் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் ரசிகர்களை ஏமாற்றாது என நம்பலாம்.

பிலிப்ஸின் பிடலியோ ஆண்ட்ராய்டு ஆடியோ டோக்கைப் பயன்படுத்த வேண்டுமானால் நாம் பிலிப்ஸின் பிடலியோ அப்ளிகேசன்களைக் கண்டிப்பாக பயன்படுத்தி ஆகவேண்டும். இந்த அப்ளிகேசன்களை ஆண்ட்ராய்டு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பிலிப்ஸ் இந்த டாக்கில் க்யூஆர் கோடையும் வழங்குகிறது. அதனால் பிலிப்ஸின் பிடலியோ ஆண்ட்ராய்டு ஆடியோ டாக் ஒரு யூசர் ப்ரண்ட்லியாக இருக்கும்.

அதனால் இந்த க்யூவர் ரீடர் நம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் இருந்தால் போதும். இதை இயக்க முடியும். அது இல்லையானால் ஆண்ட்ராய்டு சந்தையில் தேடி கண்டுபிடித்து பதிவிறக்கம் செய்தால் போதும். அப்ளிகேசன்களை இன்ஸ்ட்டால் செய்துவிட்டு ஸ்மார்ட்போனோடு இந்த பிலிப்ஸின் டோக்கை இணைத்தால் போதும். இந்த பிலிப்ஸின் பிடலியோ ஆண்ட்ராய்டு ஆடியோ டோக்கின் விலை ரூ.8,000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X