Home
Music

ரூ.15,000ல் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கேமரா!

By Karthikeyan
ரூ.15,000ல் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கேமரா!

நெடுங்காலமாகவே பேன்டக்ஸ் நிறுவனம் கேமரா தொழிலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் அந்த நிறுவனம் பென்டக்ஸ் ஆப்சியோ விஎஸ்20 என்ற கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேமரா ஒரு சூப்பர் சூம் கொண்ட கேமரா ஆகும். மேலும் இதன் விலையும் அதிகமில்லை. இந்த கேமராவின் உச்சியில் ஒரு ரிலீஸ் பட்டனுக்கப் பதிலாக இரண்டு பட்டன்கள் உள்ளன. அதனால் நீள்வாக்கிலோ அல்லது குறுக்குவாக்கிலோ போட்டோ எடுத்தாலும் இந்த பட்டன்கள் உதவி செய்யும்.

பேன்டக்ஸ் ஆப்சியோ விஎஸ்20 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பாரத்தால் இது குறைந்த எடை கொண்ட ஒரு அடக்கமான கேமரா ஆகும். இது 16 மெகா பிக்சல் சிசிடியைக் கொண்டிருக்கிறது. இதன் சூம் அளவைப் பார்த்தால் அது 20 x சூம் (28-560 மிமீ) ஆகும். மேலும் நீண்ட தூரத்திற்கு இந்த கேமரா மூலம் போக்கஸ் செய்ய முடியும்.

இந்த கேமரா 3 இன்ச் எல்சிடி திரையைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 720பி ரிசலூசன் கொண்ட வீடியோ ரிக்கார்டிங்கை இந்த பென்டக்ஸ் கேமரா சப்போர்ட் செய்யும். இந்த கேமராவின் தடிமன் 38.5 மிமீ ஆகும்.

இந்த பென்டெக்ஸ் கேமரா அழகான டிசைனைக் கொண்டுள்ளது. இது மெட்டலிக் சில்வர் மற்றும் கருப்பு வண்ண கலவைகளில் வருகிறது. இதன் கட்டுப்பாட்டு பட்டன்கள் பெரிதாக இருப்பதால் அவற்றை இயக்குவது மிக எளிதாக இருக்கும். மேலும் இந்த கேமரா அழத்தத்தையும் தாங்கும் சக்தி கொண்டது.

இதன் தொழில் நுட்ப வசதிகளைப் பார்த்தால் இந்த கேமரா சூப்பர் கம்பேக்ட் டிஜிட்டல் கேமராக்களை ஒத்திருக்கிறது. அதாவது இதன் 16 மெகா பிக்சல் ரிசலூசன் கொண்ட சிசிடி சென்சார் தரமான மற்றும் துல்லியமான படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவும். இந்த கேமரா ஆப்டிக்கல் சூம் மற்றும் டிஜிட்டல் சூமையும் கொண்டுள்ளது. மற்ற கேமராக்கள் எல்லாம் அகல ஆங்கில் லென்சில் கவனம் செலுத்தும் போது இந்த கேமரா நீளவாக்கில் போக்கஸ் செய்யும் லென்சில் கவனம் செலுத்துகிறது. இதன் 3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே 4, 60,000 பிக்சலைக் கொண்டிருக்கிறது.

இந்த கேமராவின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது துணை ஷட்டர் ரிலீஸ் பட்டன் கொண்டு வருகிறது. இது நீள்வாக்கிலும, குறுக்குவாக்கிலும் போட்டோ எடுப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த பென்டக்ஸ் ஆப்சியோ விஎஸ்20 கேமராவின் விலை ரூ.15,000 ஆகும். இந்த கேமரா அடுத்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X