விரைவில் வரும் பான்டோரா கேமிங் கன்சோல்!

Posted By: Karthikeyan
விரைவில் வரும் பான்டோரா கேமிங் கன்சோல்!

கேமிங் சந்தையில் பான்டோரா சாதனங்கள் ஒரு பிரபலமான ஒன்றாகும். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கேமிங் துறையில் ப்ராஜக்ட் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த ப்ராஜக்ட் பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட முடியவில்லை. ஆனால் இப்போது முழு வீச்சில் ஈடுபட இருக்கிறது.

பன்டோரா ப்ராஜக்ட் என்பது கைகளினால் விளையாடும் கேமிங் டிவைஸ்களை அதன் சாப்ட்வேர் மற்றும் டிசைன்களோடு உருவாக்குவதாகும். அதனால் இந்த ப்ராஜக்ட் லினக்ஸ் சாப்ட்வேரின் அடிப்படையில் கேமிங் டிவைஸ்களை உருவாக்குகிறது.

இந்த கேமிங் டிவைஸ் எஆர்எம் பேஸ்டு ப்ராசஸர் கொண்டிருக்கிறது. அதுபோல் லினக்ஸை சப்போர்ட் செய்யும் இயங்குதளம் கொண்டிருக்கிறது. அதுபோல் இது க்யூவெர்ட்டி கீபோர்ட் மற்றும் கேமை இயக்கும் டூவல் ஸ்டிக் அனலாக் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

இந்த ப்ராஜக்ட் 4 ஆண்டுகளாக இயங்கி வந்தாலும் இதுவரை இது பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஏனெனில் இந்த ப்ராஜக்ட் குழு தனது சாப்ட்வேர் கேமிங் டிவைஸை அறிமுகப்படுத்த எந்த ஒரு நிறுவனமும் கைகொடுக்கவில்லை. ஆனால் இப்போது அந்த நிலை மாறவிருக்கிறது.

இந்த பான்டோரா ப்ராஜக்டின் புதிய கேமிங் டிவைஸ் பழைய ஸ்டலில் வருகிறது. ஆனால் புதிய தொழில் நுட்பங்களுடன் வரும். குறிப்பாக இந்த டிவைஸ் 4.3 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 800 X 480 ஆகும். அதுபோல் இது 600 மெகா ஹெர்ட்ஸ் டிஐ ஒஎம்எபி ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் பவர்விஆர் க்ராபிக்சும் இந்த டிவைசில் உண்டு. இதன் ரேம் 512 எம்பி ஆகும்.

இப்போது உள்ள ஸ்மார்ட்போன்கள் எல்லாம் மிகத் தரமான சாப்ட்வேர் மற்றும் தொடுதிரை மற்றும் வீடியோ கேம்களைக் கொண்டு வருகிறது. ஆனால் இவற்றை எல்லாம் பன்டோரா ப்ராஜக்ட் பின்னுக்குத் தள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot