Home
Music

பானசோனிக்கின் புதிய ஸ்லிம் கேமரா!

By Karthikeyan
பானசோனிக்கின் புதிய ஸ்லிம் கேமரா!

சமீபத்தில் பனோசோனிக் நிறுவனம் தனது புதிய அடக்கமான டிஜிட்டல் கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேமரா பானசோனிக் லுமிக்ஸ் ஸட்எஸ்20 வரிசையில் வருகிறது. மேலும் இந்த கேமராதான் 20எக்ஸ் சூம் கொண்ட மிகவும் மெல்லிய கேமரா ஆகும்.

இந்த லுமிக்ஸ் ஸட்எஸ்20 கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 1.1 இன்ச் மட்டுமே தடிமன் கொண்டுள்ளது. இந்த கேமராவில் 14 மெகா பிக்சல் உயர் சென்சிட்டிவிட்டி எம்ஒஎஸ் செனி்சார் மற்றும் உயர் டெபினிசன் கொண்ட வீடியோ ரிக்கார்டிங், எவிசிஎச்டி பார்மட்டில் வீடியோவை பதிவு செய்யும் வசதி 20எக்ஸ் ஆப்டிக்கல் சூம் மற்றும் பானசோனிக் வீனஸ் என்ஜின் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த கேமராவின் இயங்கும் வேகத்தைப் பார்த்தால் இது ஒரு வினாடிக்கு முழு ரிசலூசனில் 10 ப்ரேம்களை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் இது ஜிபிஎஸ்ஸையும் சப்போர்ட் செய்கிறது. இதன் ஆட்டோ போக்கஸ் ஒளியினுடைய வேகத்தைக் கொண்டிருக்கும். இந்த கேமராவின் எல்சிடி தொடுதிரை டிஸ்ப்ளே 3 இன்ச் அளவில் 460கே டாட் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது.

இந்த கேமரா மிகவும் அழகாக உள்ளது. அதுபோல் மற்ற கேமராக்களை விட இந்த கேமரா மிகவும் மெல்லியதாக இருக்கிறது. இதன் ஷட்டர் பட்டன் மற்றும் செலக்டர் பட்டன் மெட்டலிக் சில்வர் நிறத்தில் வருகிறது. இந்த கேமரா சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் வருவதால் அனைவரின் மனங்களையும் கவரும் விதத்தில் உள்ளது.

மேலும் இந்த கேமரா 20எக்ஸ் சூம் கொண்டிருப்பதால் தூரத்தில் உள்ள பொருள்களைக் கூட மிகத் துல்லியமாக படம் பதிவு செய்யும் சக்தி வாய்ந்தது. அதுபோல் இந்த உயர் சென்சிட்டிவிட்டி எம்ஒஎஸ் சென்சார் 14 மெகா பிக்சல்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமரா வீடியோ ரிக்கார்டிங்கையும் சப்போர்ட் செய்யும்.

இந்த பானசோனிக் கேமராவின் விலை ரூ.20,000க்குள் இருக்கும் என்று தெரிகிறது. விலை அதிகமாக தெரிந்தாலும் இதன் பயன்பாடு அந்த விலையை ஈடுகட்டும் என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X