டொயோட்டா காருக்கு பானாசோனிக் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்!

By Super
|
டொயோட்டா காருக்கு பானாசோனிக் இன்போடெயின்மென்ட் சிஸ்டம்!

டொயோட்டோ ஐகியூ சிட்டி காருக்காக பானாசோனிக் நிறுவனம் புதிய டிஸ்ப்ளேவுடன் கூடிய ஆடியோ சிஸ்டத்தைத் தயாரித்திருக்கிறது. இந்த சிஸ்டத்தை நோக்கியா மிரர்லிங்க் இணைப்பு வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிரர்லிங்க் காரின் ஆடியோ சிஸ்டத்தோடு ஸ்மார்ட்போனை இணைக்கும். இந்த பானாசோனிக்கின் 2-டின் டிஸ்ப்ளே-ஆடியோ சிஸ்டம் டொயோட்டோ டச் லைப் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பானாசோனிக் டிஸ்ப்ளே-ஆடியோ சிஸ்டம் டபுள்யூவிஜிஏ டிஎப்டி 7 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் திரையில் என்ன பார்ப்போமோ அவற்றை இந்த தொடுதிரையில் பார்க்க முடியும். அதனால் இந்த தொடுதிரையில் ஸ்மார்ட்போனில் இயங்கும் மிரர்லிங்க் அப்ளிகேசன்கள் தெரியும்.

ஸ்மார்ட்போனில் தெரியும் மிரர்லிங் அப்ளிகேசன்களை ஐகியூ தொடுதிரையில் அக்சஸ் செய்ய முடியும். அதாவது மியூசிக் பிளேயர்கள் மேப்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை அக்சஸ் செய்ய முடியும்.

நோக்கியா ஸ்மார்ட்போன் இருந்தால் நோக்கியா கார் மோடு அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஸ்மார்ட்போன் மிரர்லிங் வசதி கொண்டிருந்தால் கார் மோடு அப்ளிகசன் ஸ்மார்ட்போனை டொயோட்டா டச் லைப்போடு இணைக்க உதவி செய்யும்.

நோக்கியா கார்மோடு அப்ளிகேசன் இந்த மாதம் முதல் கிடைக்கும். இந்த கார்மோடு அப்ளிகேசன் யூசர் இன்டர்பேசை மிக எளிதாக்குகிறது.

டொயோட்டோ டச் லைப் ஐஒஎஸ் 4 மற்றும் புதிய வெர்ஷன் ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஆப்பிள் ஐபோனுக்கு இணைப்பு வசதியை வழங்குகிறது. டொயோட்டோ ஐகியூ சிட்டி கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் தனது ஐபோனை இணைக்க ஆன்லைன் மூலம் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X