அருமையான இசைக்கு ஓர் பலோ ஆல்ட்டோ மீயூசிக் ஸ்பீக்கர்

மேசை ஸ்பீக்கர்கள் அதன் குறைவான விலைக்காகவும் தரமான ஒலி அமைப்புக்காகவும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. மேலும் அவற்றை பொருத்துவதும் மிக எளிதாக இருக்கும். குறிப்பாக யுஎஸ்பி இணைப்பு மூலம் இந்த ஸ்பீக்கர்களை எந்த ஒரு டிவைஸோடும் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக எந்த ஒரு சாப்ட்வேரையும் நிறுவ வேண்டிய அவசியமில்லை.
பலோ ஆல்ட்டோ மீயூசிக் ஸ்பீக்கர்கள் மிகவும் அடக்கமானவை. குறிப்பாக இதற்கு பெரிய அறைகள் தேவையில்லை. மேலும் இதை மேசை கணனியின் இருபக்கங்களிலும் வைத்தாலே போதுமானது. மேலும் இது இதை இணைக்க ப்ளக்கைத் தேட வேண்டிய அவசியமில்லை. யுஎஸ்பி போர்ட் மூலம் எளிதாக கணனியோடு இணைத்துக் கொள்ளலாம். மேலும் இதன் ஒலி அமைப்பும் மிக அருமையாக உள்ளது. மேலும் இவற்றை ஸ்டேண்ட் அலோன் மீடியா ப்ளேயர்களோடும் இவற்றை இணைத்துக் கொள்ளலாம்.
இந்த பலோ ஆல்ட்டோ மீயூசிக் ஸ்பீக்கர்கள் சிறியதாக இருந்தாலும் இதன் ஒலி அமைப்பு மிக அற்புதமாக இருக்கும். டிஜிட்டல் பேஸ் வசதியோடு நூற்றுக்கணக்கான ஒலி அமைப்புகளை வழங்குகிறது. மேலும் தனியாக ஒருவர் மட்டும் கேட்கும் வகையில் இதன் ஒலி அளவை மாற்றிக் கொள்ளலாம் அதற்காக அவை மைனர் நிகில்களைக் கொண்டுள்ளன. அதனால் இதன் ஒலி மிகவும் ரம்மியமாக இருக்கும்.
இந்த பலோ ஆல்ட்டோ மீயூசிக் ஸ்பீக்கர்கள் ப்ளாஸ்டிக்கில் மெட்டலிக் சில்வர் நிறத்தில் வருவதால் பார்ப்பதற்கு மிக அழகாக இல்லை. ஆனால் இதன் செயல்திறன் அதன் சிறிய அளவு மற்றும் இதன் மிக குறைந்த விலை கண்டிப்பாக வாடிக்கையாளர்களைக் கவரும் சிறப்பு அம்சங்களாக இருக்கும். குறிப்பாக நாம் கணனியில் வேலை பார்க்கும் போது இந்த பலோ ஆல்ட்டோ மீயூசிக் ஸ்பீக்கர்கள் நமக்கு உற்சாகமூட்டும் இசையை வழங்குவது நிச்சயம்.
பலோ ஆல்ட்டோ மீயூசிக் ஸ்பீக்கர்களின் மின் திறன் 5 வாட்ஸ்களாகும். இதன் விலையைப் பார்த்தால் 47 பவுண்டுகளாகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,557 ஆகும்.


Click it and Unblock the Notifications